01. கீழ்க்கண்டவற்றில் பொறுத்தம் அற்றதை குறிப்பிடு?
A. லைக்கோபைட்டா
B. ஸைலோபைட்டா
C. ஹிஸ்டிரோபைட்டா
D. பிலிகோபைட்டா
02. மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?
A. DNA மற்றும் RNA
B. mRNA மற்றும் rRNA
C. DNA மற்றும் ரைபோசோம்கள்
D. RNA மற்றும் ரைபோசோம்கள்
03. இடமாற்றம் ஆர்.என்.ஏ ( tRNA ) ஆற்றல் மிகு அமோனோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
A. 3' CCA முடிவிடம்
B. ஆண்டிகோடான் நுணி
C. 5' OH முடிவிடம்
D. T Ψ C வளைவு
04. கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது?
A. அஸ்பர்ஜில்லஸ்
B. பெனிசிலியம்
C. ஜிப்பெரெல்லா
D. நியுரோஸ்போரா
05. ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
A. ADP + NADPH2
B. கார்போஹைட்ரேட்
C. ATP + NADP
D. ATP + NADPH2
06. அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?
A. மியுசேசி
B. யூபோர்பியோசி
C. பேபிலியோனேசி
D. மால்வேசி
07. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி?
A. பாசில்லஸ் லாக்டி
B. எ.கோலை
C. பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
D. ஸ்டெப்டோமைசிஸ் கிரிசஸ்
08. வாட்சன், கிரிக் டி.என்.ஏ வின் மறுபெயர்?
A. B - DNA
B. A - DNA
C. Z - DNA
D. C - DNA
09. ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?
A. சாருண்ணிகளில் காணப்படும் சிறப்பு உறுப்புகள்
B. ஒட்டுண்ணி தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர் அமைப்புகள்
C. தற்சார்பு உயிரிகளின் உணவு உற்பத்தி மையங்கள்
D. பிறசார்பு ஊட்ட உயிரிகளின் சீரண மண்டலம்
10. தாவர வைரஸ்களில் காணப்படுவது?
A. டி.என்.ஏ
B. ஆர்.என்.ஏ
C. கேப்சிட்
D. இலைகள்