01. அங்காடியில் நிறைவு போட்டி நிலவும்போது தொழில் முனைவோர்
ஈட்டுவது
a. இயல்பு இலாபம்
b. மிகை இயல்பு இலாபம்
C. நஷ்டம்
d. இவற்றுள் எதுவுமில்லை
02. இது எவ்வளவு விற்க விரும்புகிறதோ அவ்வளவை அங்காடி விலையில்
விற்கலாம் எனும் வாக்கியம் தொடர்புடையது
a. நிறைவு போட்டி
b. முற்றுரிமை
c. சில்லோர் முற்றுரிமை .
d. வாங்குவோர் முற்றுரிமை
03. அங்காடியானது சக்தியற்று காணப்படுவது ...... பொருளாதாரத்தில்
a. பொதுவுடமை
b. முதலாளித்துவம்
C. கலப்பு
d. தொன்மை
04. நிறைவு போட்டியில் நிறுவனங்கள்....... பொருளையே உற்பத்தி செய்கிறது
a. பதிலீடு
b. ஓரியல்பு
c. பலதரப்பட்ட
d. இவையனைத்தும்
05. நிறைவு போட்டியில் தேவைகோடு இவ்வாறு இருக்கும்
a. மேல்நோக்கி சரிந்து செல்லும்
b. கிடைமட்டமாக இருக்கும்
c. கீழ்நோக்கி சரிந்து செல்லும்
d. செங்குத்தாக இருக்கும்
06. ஓரியல்பு பண்டங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் கொண்ட
அங்காடி அமைப்பு ................ என அழைக்கப்படுகிறது.
a. நிறைகுறை
போட்டி
b. நிறைவு போட்டி
c. முற்றுரிமை
d. சிலர் முற்றுரிமை
07. நிறுவனத்தின் சராசரி வருவாயானது, சராசரி செலவைவிட அதிகமாகஇருப்பின் அந்நிறுவனம்
................... ஈட்டும்
a. நஷ்டம்
b. இயல்பு இலாபம்
c. அதிகபட்ச இலாபம்
d. மேற்கண்ட அனைத்தும்
08. முற்றுரிமை போட்டி கருத்தை உருவாக்கியவர்
a. ராபின்சன்
b. நியூமென்
c. மார்ஷல்
d. சேம்பர்லின்
09. முற்றுரிமை
போட்டியில் ஒரு நிறுவனம் நீண்டகால சமநிலையை அடைவது
a.
நீண்டகால சராசரி செலவு கோட்டின் குறைந்தப்
பட்ச புள்ளியில்
b.
நீண்டகால சராசரி செலவு கோட்டின் இறங்குமுகப்
பகுதியில்
c. நீண்டகால சராசரி செலவு கோட்டின் ஏறுமுகப் பகுதியில்
d.
விலை இறுதிநிலை செலவுக்கு சமமாக இருக்கும் போது
10.
மதிப்பில், காலத்தின் பங்கினை விளக்கியவரின்
பெயர்
a. ராபின்ஸ்
b. பிகு
c. ஆல்பிரட் மார்ஷல்
d. காரல் மார்க்ஸ்