1. நாலுமிரண்டும் சொல்லுக் குறுதி -
இத்தொடர் குறிக்கும் ஆகுபெயர்.
- எண்ணலளவை
- நீட்டல் அளவை
- முகத்தலளவை
- எடுத்தலளவை
2. இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ........... ஆகும்
- பகுபதம்
- பகாபதம்
- விளி
- எதுவுமில்லை
3. காரிகை கூறும் வனப்புகளை வரிசைப்படுத்து
- அழகு, அம்மை, தொன்மை, விருந்து, தோல்
- தோல், விருந்து, அம்மை. அழகு. தொன்மை
- அம்மை. அழகு. தொன்மை, தோல், விருந்து
- அம்மை, தோல், விருந்து, தொன்மை, அழகு
4. 'புடைநூல்' என வழங்கப்படுவது
- முதல் நூல்
- விரிநூல்
- தொகை நூல்
- சார்பு நூல்
5. 'துணிவு கொள்ளுதல் ' எனும் உத்தி நூலில் எதற்குரியது
- மதம்
- குற்றம்
- அழகு
- எதுவுமில்லை
6. 'மடற்பனை' உவமை யாருக்குரியது
- கடைமாணாக்கர்
- தலைமாணாக்கர்
- ஆசிரியராகாதோர்
- நல்லாசிரியர்
7. ஒவ்வோர் அடியிலும் ஐந்து சீர்களைப் பெற்று நான்கு அடிகளாய் வருவது
- கலித்தாழிசை
- கலித்துறை
- வஞ்சித்தாழிசை
- வஞ்சித்துறை
8. தொல்காப்பிய
எழுத்ததிகாரத்தில் உள்ள இயல் எண்ணிக்கை -
- 3
- 5
- 6
- 9
9. சார்பெழுத்தின் விரி
- 360
- 269
- 379
- 369
10. பொருத்துக.
- A. தன்மையணி - 1. காப்பியப்பண்பு
- B. தீவக அணி - 2. ஒரு சொல் பல இடங்களில் வந்து பொருள் தருவது
- C. சிலேடையணி - 3. எவ்வகை பொருளும் மெய்வகை விளக்கும்
- D. பாவிகம் - 4. பல பொருள் தருவது
- 3, 2, 4, 1
- 4, 3, 2, 1
- 1, 3, 4, 2
- 4, 2, 3, 1
Tags:
PG TRB TAMIL