வேதியியல் Question And Answer - 09

01. " திரவப் பொருளின் அழுத்தமானது எல்லா திசைகளிலும் சமமான அளவில் செல்லுகிறது " என்பதைக் கூறும் விதி?

கிரகாம் விதி

நியூட்டன் விதி

பாஸ்கல் விதி

பாயில்ஸ் விதி

 

02. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்?

நிக்கல்

குரோமியம்

தாமிரம்

வெள்ளி

 

03. ரொட்டித் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் உப்பின் பெயர்?

சோடியம் குளோரைட்

சோடியம் பை கார்பனேட்

சோடியம் நைட்ரேட்

சோடியம் கார்பனேட்

 

04. திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?

குளோரின்

அயோடின்

புரோமைன்

புளோரின்

 

05. பித்தளை என்பது எதன் உலோகக் கலவை?

பாதரசம், துத்தநாகம்

தாமிரம், துத்தநாகம்

அலுமினியம், தாமிரம்

தாமிரம், தங்கம்

 

06. குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்?

ஆக்சிஜன்

பாதரசம்

நிலக்கரி

தாமிரம்

 

07. "இடம் பெயர்தலை" ( Laws of Motion ) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார்?

ஐந்து

மூன்று

ஆறு

நான்கு

 

08. வண்ணப்படுத்தவும், பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படும் அமிலம்?

ஹைட்ரோகுளோரிக்

அசிட்டிக்

பார்மிக்

சிட்ரிக்

 

09. அணுவின் அடிப்படையில் அடங்கியது?

எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள்

நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்

எலக்ட்ரான்கள் மட்டும்

புரோட்டான்கள் மட்டும்

 

10. மார்ஷ் வாயு என்பது?

அசிட்டிலின்

எத்திலின்

மீத்தேன்

சல்பர் - டை - ஆக்சைடு

Previous Post Next Post