குண்டலகேசியின் உருவம்:
- ஆசிரியர் = நாதகுத்தனார்
- காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
- பாவகை = விருத்தம்
- சமயம் = பௌத்தம்
பெயர்க்காரணம்:
- துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.
நூலின் வேறு பெயர்கள்:
- குண்டலகேசி விருத்தம்
- அகல கவி
பொதுவான குறிப்பு:
- சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
- புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
- பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.
மேற்கோள்:
- பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே
மேல்வரும் மூபுன் ஆகி
நாளும் நாள் சாகின்றோமால்
நமக்கு நாம் அழாதது என்னோ
Tags:
இலக்கிய வரலாறு