General Knowledge Question And Answer - 23

1. அணு எண் என்றால் என்ன?

Ans: அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

2. தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?

Ans: நெல்சன் மண்டேலா

3. மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?

Ans: 27 ஆண்டுகள்

4. மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
Ans: ராபன்தீவில்

5. மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?

Ans: பிப்ரவரி 2 1990 ஆண்டு

6. மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?

Ans: 71

7. அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது

Ans: 1993

8. மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?

Ans: பாரத ரத்னா, அமைதி, நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.

9. மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?

Ans: நெல்சன்ரோபிசலா மண்டேலா

10. தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

Ans: மடிபா(Madiba)

11. வெறும் கண்களால்பார்க்ககூடியகோள்கள்?

Ans: புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி

12. தொலைநோக்கியில்மட்டும்பார்க்ககூடியகோள்கள் ?

Ans: யுரேனஸ், நெப்ட்யூன்

13. சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?

Ans: புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

14. சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?

Ans: வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

15. சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?

Ans: பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,

16. கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?

Ans: வெள்ளி, யுரேனஸ்

17. மலர்என்றால்என்ன ?

Ans: மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு.

18. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?

Ans: சூரியகாந்தி

19. மஞ்சரிஎன்றால்என்ன?

Ans: ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

20. மலரின் உறுப்புகள் என்ன?

Ans: பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
Previous Post Next Post