1. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என திரு.வி.க எந்த காவியத்தை கூறினார்?
A)
பெரிய புராணம்
B)
கந்த புராணம்
C)
சீறாப்புராணம்
D)
திருவிளையாடற்புராணம்
2. வீடுதோறிரந்தும்
– பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக
A)
வீடுதோறும்
+ இரந்தும்
B)
வீடுதோ + றும் + இரந்தும்
C)
வீடுதோர் + இரந்தும்
D)
வீடுதோறு + இரந்தும்
3. பொருத்தமில்லாத இணை
A)
இன்மை –
இன்பம்
B)
திண்மை – வலிமை
C)
ஆழி – கடல்
D)
நோன்மை – தவம்
4. சந்திப் பிழையற்ற தொடர் எது?
A)
கடுகை துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் திற்த்தக் குறள்
B)
கடுகைத் துளைத்து ஏழ்க்கடலைப் புகட்டி குறுகத் தறித்தக் குறள்
C)
கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறிக்காகக்குறள்
D)
கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்
5. பிறமொழிச் சொற்களை நீக்குதல்
நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்.
A)
வணக்கம் என்று பணிந்தவனை வாழ்த்தினேன்
B)
வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்
C)
வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்
D)
வணக்கம் என்று விழந்தவனை ஆசீர்வதித்தேன்
6. பிறமொழிச் சொற்களற்ற தொடர்
A)
அவர்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.
B)
அவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
C)
அவர்கள் இருவருக்கும் இடையே சம்பாஷணை நடந்தது.
D)
அவர்கள் இருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.
7. ‘வருவான்’ என்பதில் வேர்ச்சொல் யாது?
A)
வரு
B)
வருவார்
C)
வா
D) வ
8. ‘கொள்’ என்று வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிய வினையெச்சம் எது?
A)
கொண்டு
B)
கொண்ட
C)
கொள்ளற்க
D)
கொண்டார்
9. ‘கொல்’ என்ற வேர்ச்சொல்லிற்கான தொழிற்பெயர் எது?
A)
கொல்க
B)
கொல்லற்க
C)
கோறல்
D)
கொன்ற
10. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிக – ‘மா’
A)
குட்டி
B)
கொக்கு
C)
விலங்கு
D)
நீர்