1. உத்தரகாண்டத்தைப் பாடியவர்
A. ஒட்டக்கூத்தர்
B. கம்பர்
C. ஜெயங்கொண்டார்
D. புகழேந்திப் புலவர்
2. கலித்தொகையில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்
A. கபிலர்
B. சோழன் நல்லுருத்திரன்
C. மருதன் இளநாகனார்
D. நல்லந்துவனார்
3. கீழ்க்கண்டவற்றில் அகிலன் எழுதாத நூல் எது?
A. சித்திரப்பாவை
B. கயல்விழி
C. பாவை விளக்கு
D. குறிஞ்சி மலர்
4. பிள்ளைத் தமிழில் தோன்றிய முதல் இலக்கியம்
A. திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
B. முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
C. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
D. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
5. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர்
A. ஓளவையார்
B. வெள்ளிவீதியார்
C. அசலாம்பிகையார்
D. அம்புஜத்தம்மாள்
6. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய தூது வகை நூல்
A. அழகர் கிள்ளைவிடு தூது
B. தமிழ்விடு தூது
C. நெஞ்சுவிடு தூது
D. தென்றல்விடு தூது
7. தமிழில் முதலில் தோன்றிய பரணி இலக்கியம்
A. தக்காயப்பரணி
B. கலிங்கத்துப்பரணி
C. வங்கத்துப்பரணி
D. மோகவதைப் பரணி
8. கீழ்க்கண்டவற்றுள் ஒட்டக்கூத்தர் எழுதாத நூல் எது?
A. சடகோபரந்தாதி
B. தக்காயப்பரணி
C. உத்திரகாண்டம்
D. மூவருலா
9. "பராபரக் கண்ணி" - பாடியவர்
A. தாயுமாணவர்
B. பட்டினத்தார்
C. அருணகிரிநாதர்
D. இராமலிங்க அடிகளார்
10. "பண்டைத் தமிழர் நாகரீகமும் பண்பாடும்" என்ற நூலை எழுதியவர்
A. மறைமலையடிகள்
B. தேவநேயப் பாவாணர்
C. ரா.பி.சேதுப்பிள்ளை
D. மு.வரதராசனார்