1. மரஞ்செடியினின்று
பூ
கீழே
விழுந்த
நிலையைக்
குறிக்கும்
சொல்
எது?
அ) அரும்பு
ஆ) மலர்
இ)
வீ
ஈ) செம்மல்
2. திராவிட
மொழிகளின்
ஒப்பியல்
இலக்கணம்
என்னும்
நூலை
எழுதியவர்
யார்?
அ) பாவாணர்
ஆ) கால்டுவெல்
இ) இரா. இளங்குமரனார்
ஈ) திரு.வி.க
3. திருவள்ளுவர்
தவச்சாலை
அமைந்துள்ள
இடம்
எது?
அ) அல்லூர்
ஆ) திருவள்ளுவர்
இ) கல்லூர்
ஈ) நெல்லூர்
4. குச்சியின் பிரிவு
எச்சொல்லால்
அழைக்கப்படுகிறது?
அ) போத்து
ஆ) குச்சி
இ) இணுக்கு
ஈ) சினை
5. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தூறு
ஆ) கழி
இ) கழை
ஈ) கவை
6. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தாள்
ஆ) தண்டு
இ) கிளை
ஈ) கோல்
7. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) கவை
ஆ) தட்டு
இ) கொம்பு
ஈ) சினை
8. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கவை - குச்சியின் பிரிவு
ஆ) கொம்பு - கவையின் பிரிவு
இ) போத்து - சினையின் பிரிவு
ஈ) குச்சி - போத்தின் பிரிவு
9. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தாள், தண்டு , கோல், தூறு
ஆ) கவை, கொம்பு, கிளை, சினை
இ) சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை
ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை
10. பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.
அ) சண்டு
ஆ) சருகு
இ) தோகை
ஈ) கட்டை
11. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) சண்டு - காய்ந்த தாளும் தோகையும்
ஆ) சருகு - காய்ந்த இலை
இ) தாள் - புலி, வேம்பு முதலியவற்றின் இலை
ஈ) தோகை - சோளம், கம்பு முதலியவற்றின் இலை
12. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தோகை, ஓலை, சண்டு, சருகு
ஆ) துளிர், முறி, கொழுந்து, கொழுந்தாடை
இ) பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, கவ்வை
ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை
13. தும்பி - இச்சொல்லின் பொருள்
அ) தும்பிக்கை
ஆ) வண்டு
இ) துந்துபி
ஈ) துன்பம்
14. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் - சரியானவற்றைச் தேர்ந்தெடு.
அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு
ஆ) இலை, தோகை, தாள், தளிர், குருத்து, அரும்பு
இ) தாள், தோகை, தூறு, தட்டு, தண்டு, ஓலை
ஈ) இலை, தாள், ஓலை, தளிர், கொழுந்து, சண்டு
15. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்று பாடியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) தேவநேயப் பாவாணர்
16. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.கலியானசுந்தரனார்
ஈ) மறைமலையடிகள்
17. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
18. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
19. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
அ) ஜி. யு. போப்
ஆ) வீரமாமுனிவர்
இ) இளங்குமரனார்
ஈ) பெருங்குமரனார்
20. இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
அ) திரு.வி.கலியானசுந்தரனார்
ஆ) பாவாணர்
இ) மு.வ
ஈ) ஜீவா
21. தமிழ்த்தென்றல் என்று போற்றப்பட்டவர் யார்?
அ) இளங்குமரனார்
ஆ) பெருந்தேவனார்
இ) திரு.வி.கலியானசுந்தரனார்
ஈ) ம.பொ .சி
22. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?
அ) மலேசியா, க. அப்பாத்துரையார்
ஆ) சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்
இ) இந்தியா, இளங்குமரனார்
ஈ) கனடா, ஜி.யு. போப்
23. பன்மொழிப் புலவர் என்றழைக்கப்பட்டவர் யார்?
அ) க. அப்பாத்துரையார்
ஆ) தேவ நேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி. யு. போப்
24. சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
அ) 30
ஆ) 60
இ) 40
ஈ) 80
25. மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்டவர் யார்?
அ) க. அப்பாத்துரை
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி. யு. போப்
26. ‘தமிழ்ச்சொல் வளம்' என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் எது?
அ) சொல்லாய்வுக் கட்டுரைகள்
ஆ) தேவநேயம்
இ) மொழி மரபு
ஈ) ஆய்வியல் நெறிமுறைகள்
27. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களுக்கு எது அமைந்திருக்கும்?
அ) அன்பொழுக்கம்
ஆ) அறிவொழுக்கம்
இ) களவொழுக்கம்
ஈ) கற்பொழுக்கம்
28. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) வெள்ளைவாரணார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
29. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
அ) தனிநாயகம் அடிகள்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) மு. வரதராசனார்
30. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) தெலுங்கு
ஈ) வங்காளம்
31. கொழுந்தாடை என்பது யாது?
அ) நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து
ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
இ) தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
ஈ) கரும்பின் நுனிப்பகுதி
32. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது?
அ) லெபனான்
ஆ) லிசுபன்
இ) கெய்ரோ
ஈ) ஹராரே
33. கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?
அ) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஆ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
இ) செம்மொழி மாநாட்டு மலர்
ஈ) தமிழிலக்கிய வரலாறு மு.வ.
34. ’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்குநல்லஉரங்கள்.
இத்தொடரில்அடிக்கோடிட்டபகுதிகுறிப்பிடுவது---------
அ) இலையும்சருகும்
ஆ)தோகையும்சண்டும்
இ) தாளும்ஓலையும்
ஈ) சருகும்சண்டும்
35. வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------.
அ) குலைவகை
ஆ) மணிவகை
இ)கொழுந்துவகை
ஈ)இலைவகை