NEET - இயற்பியல் – இயக்கவியல்

1.         பொருள் ஒன்று ஒய்வு நிலையிலிருந்து ஒரு மாறாத முடுக்கம் 'a' அடைய ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்கிறது. பின்னர் அதன் முடுக்கம் குறைந்து 'b' என்ற மாறாத மதிப்பை அடைந்து ஒய்வுநிலையை அடைகிறது. இதற்கு பொருள் எடுத்துக் கொள்ளும் காலம் t எனில் அது பெரும திசைவேகம் அடைய எடுத்துக் கொள்ளும் காலம்.

A)           abt / (a+b)

B)            (a+b)t / ab

C)            t / (a+b)

D)           (a+b)t

2.         புவி ஈர்ப்பின் காரணமாக தானாக கீழே விழும் பொருள் ஒன்று இயக்கத்தில் கடைசி நொடியில் கடக்கும் தொலைவு சமம். பொருள் தரையை அடைய எடுத்துக் கொள்ளும் காலம் (வினாடிகளில்)

A)           8

B)            5

C)            13

D)           10

3          100மீ உயரமுள்ள குன்று ஒன்றிலிருந்து கல் ஒன்று கீழே விடப்படுகிறது. அதே சமயத்தில் குன்றின் அடிவாரத்திலிருந்து 100மீநொடி-1 திசைவேகத்தில் செங்குத்தாக மேல் நோக்கி தோட்டாக்கள் சுடப்படுகின்றன. எவ்வளவு நேரத்திற்குப் பிறகு (நொடியில்) தோட்டாவும் கல்லும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும்?

A)           2

B)            5

C)            1

D)           3

4.         ஒரு வட்டத்தின் சுற்றளவுப் பாதை வழியாக விமானம் ஒன்று 150 கீ.மீ/மணி சீரான திசைவேகத்தில் பறக்கிறது. அரைச் சுற்றுக்குப் பிறகு அதன் திசைவேகத்தில் அடையும் மாற்றம் (கீ.மீ/மணியில்)

A)           150

B)            200

C)            100

D)           300

5.         ஒரு இரயிலின் வேகமானது 450மீ தொலைவிற்கு உள்ளாக 60 கி.மீ /மணி என்ற வேகத்திலிருந்து 15 கி.மீ /மணி ஆக குறைக்கப்படுகிறது. எதிர் முடுக்கம் சீராக இருக்குமானால் அது நிற்பதற்கு முன்பாக கடக்கும் தொலைவு

A)           25 மீ

B)            30 மீ

C)            15 மீ

D)           20 மீ

6.         ஒரு நேர்கோட்டில் இயங்குகின்ற துகள் ஒன்றின் திசைவேகம் - காலம் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. t =9s காலத்தில் துகளின் முடுக்கம்.


            A)           -5 மீநொடி-2

B)            -3 மீநொடி-2

C)            5 மீநொடி-2

D)           பூஜ்ஜியம்

7.         ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து மேல் நோக்கி செங்குத்தாக 15 மீ/நொடி என்ற வேகத்தில் எறியப்பட்ட கல்லானது 5 நொடியில் நேரத்தில் கோபுரத்தின் அடியை அடைகிறது. கோபுரத்தின் உயரம் (g=10 மீ/நொடி2).

A)           20 மீ

B)            45 மீ

C)            50 மீ

D)           35 மீ

8.         பையன் ஒருவன் நின்று கொண்டிருக்கும் மின் உயர்த்தி ஒன்று 9.8 மீ.நொடி-1 என்ற மாறாத வேகத்தில் மேல்நோக்கி செல்கிறது. மின் உயர்த்தியினுள் பையன், 2.5 மீ உயரத்திலிருந்து நாணயத்தை கீழே நழுவ விட்டால் மின் உயர்த்தியின் அடிப்பாகத்தை அடைய நாணயம் எடுத்துக் கொள்ளும் காலம். (g-=9.8 மீ/நொடி2).

A)           √2 நொடி

B)            1/√3 நொடி

C)            √3 நொடி

D)           1/√2 நொடி

9.         பலூன் ஒன்று 10 மீ/நொடி வேகத்தில் மேல்நோக்கி செங்குத்தாக செல்கிறது. அது தரையிலிருந்து 400 மீ உயரத்தில் உள்ள போது அதிலிருந்து கல் ஒன்று கீழே விடப்படுகிறது. கல் தரையை அடைய எடுத்துக் கொள்ளும் காலம். (g=10 மீ/நொடி2).

A             10 நொடி

B             7.5 நொடி

C             5 நொடி

D             DEES

10.       பலூன் ஒன்று 15.7 மீ/நொடி2 என்ற சீரான முடுக்கத்தில் மேல்நோக்கி செங்குத்தாக எழும்புகிறது. ஒரு சமயத்தில் கல் ஒன்று பலூனிலிருந்து மற்றொரு கல் கீழே விடப்படுகிறது. முதலாவது கல் விடப்பட்டதிலிருந்து 6 விநாடிக்குப் பிறகு இரு கற்களுக்கும் இடையேயான தொலைவு

A             715 மீ

B             816 மீ

C             625 மீ

D             900 மீ

Previous Post Next Post