01. ஜெர்மேனியத்துடன் சிறிதளவு ஆண்டிமணியைச் சேர்த்தால் கிடைப்பது?
A.
n-
வகை குறை கடத்தி
B.
p- வகை குறை கடத்தி
C.
உட்சார்ந்த குறை கடத்தி
D.
உலோக கடத்தி
02. மலையேறும் ஒருவர் முன்னோக்கி நகருவதற்கான காரணம்?
A.
அவருடைய பாதத்தின் வெளிப்புறத்தில் உடலின் புவிஈர்ப்பு மையத்தை வைத்துக்கொள்ள
B.
தவறி விழுவதைத் தடுக்க
C.
அவருடைய பாதத்தில் உடலில் புவி ஈர்ப்பு மையத்தை வைத்துக்கொள்ள
D.
வேகத்தை கூட்ட
03. மின்கடத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு?
A.
மனித உடல்
B.
உலர்ந்த மரம்
C.
எபோனைட்
D.
கண்ணாடி
04. ஒளிவிலகல் எண்ணின் அலகு?
A.
டிகிரி -1
B.
டிகிரி
C.
மீட்டர்
D.
அலகு இல்லை
05. X - கதிர்கள் என்பது?
A.
மெதுவாக செல்லும் நியூட்ரான்கள்
B.
மின்காந்த அலைகள்
C.
மெதுவாக செல்லும் எலக்ட்ரான்கள்
D.
வேகமாக செல்லும் எலக்ட்ரான்கள்
06. வீடுகளில் பெறப்படும் மின்சாரம்
220 வோல்ட் மின்னோட்டம் ஆகும்.
இதில் 220 என்ற மதிப்பு குறிப்பது?
A.
உச்ச வோல்டேஜ்
B.
நிலையான வோல்டேஜ்
C.
செயலூக்கம் உடைய வோல்டேஜ்
D.
சராசரி வோல்டேஜ்
07. பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்ததல்ல?
A.
மின்னூட்டம்
B.
திசைவேகம்
C.
நிறை
D.
உந்தம்
08. நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
A.
குழி வில்லை
B.
குவி வில்லை
C.
குவியாடி
D.
குழியாடி
09. அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
A.
உலையின் சக்தியின் அளவை சீர்படுத்த
B.
நியூட்ரான்களை மந்தமாக்குவதற்கு
C.
நியூட்ரான்களை உட்கவருவதற்கு
D.
நியூட்ரான்களை விரைவாக்குவதற்கு
10. கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில்,
அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான்
( Moderator )?
A.
கிராபைட்
B.
நீர் ( H2O )
C.
கனநீர் ( D2O )
D.
மேற்கண்ட ஏதுமில்லை