01. கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?
A.
கேதோடு கதிர்கள்
B.
நேர்மின் கதிர்கள்
C.
X - கதிர்கள்
D.
மைக்ரோ அலைகள்
02. திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது?
A.
சம மட்டம்
B.
இணைத்திறன் பட்டை
C.
பெர்மி மட்டம்
D.
கடத்துப் பட்டை
03. கீழ்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
A.
சோனார் - நீருள் ஆழ்ந்த பொருள்களை கண்டுபிடிக்க
B.
பல்சார் - மனித நாடித்துடிப்பை அளவிட
C.
ராடார் - கதிர்வீச்சின் செறிவை அளவிட
D.
க்குவாசர் - ஒரு குவாண்டத்தின் ஆற்றலை அளவிட
04. பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது?
A.
திறன்
B.
நிறை
C.
உந்தம்
D.
ஆற்றல்
05. ஒரு வாகனம் கடந்து செல்லும்போது,
தொலைகாட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது.
ஏனெனில்?
A.
எலெக்ட்ரானிக் இக்னிஷன் தொகுப்பினை பயன்படுத்துதல்
B.
கடந்து செல்லும் வாகனம் தொலைக்காட்சிப் பேட்டியின் பாகங்களை பாதிக்கும்
C.
உலோக பிரதிபலிப்பு ரேடியோ அலைகள்
D.
வாகனதிலுள்ள ஸ்பார்க்பிளக் மின்காந்த இடையூறுகளை தோற்றுவிக்கும்
06. ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன முழு உருவத்தை பார்க்க,
கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது?
A.
கால் பங்கு இருக்க வேண்டும்
B.
சமமாக இருக்க வேண்டும்
C.
பாதியளவு இருக்க வேண்டும்
D.
சற்று அதிகமாக இருக்க வேண்டும்
07. 238 U 92 ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது?
A.
94
புரோட்டான் மற்றும்
146 நியூட்ரான்
B.
92 எலெக்ட்ரான் மற்றும் 146 நியூட்ரான்
C.
92 நியூட்ரான் மற்றும் 146 எலெக்ட்ரான்
D.
92 புரோட்டான் மற்றும் 146 நியூட்ரான்
08. குழிலென்ஸ் எங்கு உபயோகிக்கப்படுகிறது?
A.
சமதளம்
B.
அலமாரிகளில்
C.
ஆடிகளில்
D.
நுண்ணோக்கிகளில்
09. முனைவற்ற மூலக்கூறுகளைப் பெற்றுள்ள மின்காப்புப் பொருள் மின்புலத்தில்
(E) வைக்கப்படுகிறது அதன் தூண்டப்பட்ட இருமுனை திருப்புத்திறன்?
A.
E இன் திசையில் செயல்படும்
B.
E
க்கு எதிர் திசையில் செயல்படும்
C.
சுழி ஆகும்
D.
E க்கு செங்குத்துத் திசையில் செயல்படும்
10. ஒரு தட்டடுக்கு அமைப்பில் படுகின்ற ஒளிக்கதிருக்கும் எதிரொளிப்பு அடைந்த தளவிளைவுற்ற ஒளிக்கதிருக்கும் இடைப்பட்ட கோணம்?
A.
90°
B.
115°
C.
57.5°
D.
32.5°