தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 08

1. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு.

ANS:கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.

2. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் 

ANS: சிந்தாதேவி

3. ஆயிடைப்பிரிவு 

ANS: பரத்தையிற்பிரிவு

4. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்

ANS:கனகசபைப்பிள்ளை

5. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல்.

ANS:குறிஞ்சிப் பாட்டு

6. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் 

ANS: ஜெகசிற்பியன்

7. ஆறாம் இலக்கணம் 

ANS:புலமை இலக்கனம்

8. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர்.

ANS:பாரதியார்

9. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் 

ANS:திருவாவடுதுறை மடம்

10. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை 

ANS:அடியார்க்கு நல்லார் உரை
Previous Post Next Post