PG TRB TAMIL Study Material - 30

1. கூற்று,  காரணம் ஆராய்க

உறுதிக்கூற்று (உ): சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படும்

காரணம் (கா) : சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார்

  • (உ), (கா) - இரண்டும் சரி
  • (உ) சரி (கா) - தவறு
  • (உ), (கா) - இரண்டும் தவறு
  • (உ) தவறு (கா) - சரி

2. போர்ச்செய்திகளை தரும் நூல்

  • களவழி நாற்பது
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • கைந்நிலை

3. ஆய்ச்சியர் குரவை எக்கடவுளின் மீது பாடப்பட்டது

  • சிவன்
  • பிரம்மா
  • திருமால்
  • பலதேவன்

4. நீலகேசி பற்றிய கருத்துக்களில் கீழ்கண்டவற்றுள் சரியானது

  1. குண்டலகேசிக்கு எதிரான நூல்
  2. ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று
  3. நீலகேசித் திருட்டு எனவும் அழைக்கப்படும்
  4. இந்நூல் தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்டது

  • 1,3,4
  • 1,2,3
  • 1.2.4
  • 1,2,3,4

5. கூற்று,  காரணம் ஆராய்க

உறுதிக் கூற்று (உ): யசோதரா காவியம் - பெளத்தம் நூல்

காரணம் (கா) : கொல்லாமை நீதி கூறுவது

  • (உ) தவறு (கா) சரி
  • (உ) சரி, (கா) தவறு
  • (உ) (கா) இரண்டும் தவறு
  • (உ) (கா) இரண்டும் சரி

6. தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட காவியம்

  • நீலகேசி
  • குண்டலகேசி
  • சூளாமணி
  • யசோதரா காவியம்

7. கூற்று,  காரணம் ஆராய்க

உறுதிக் கூற்று(உ): ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று பெருங்கதை

காரணம்(கா): பிருகத்கதா என்னும் வடநூலின் தழுவல் அது

  • (உ), (கா) இரண்டும் தவறு
  • (உ), (கா) இரண்டும் சரி
  • (உ) தவறு, (கா) சரி
  • (உ) சரி (கா) தவறு

8. கூற்று,  காரணம் ஆராய்க

உறுதிக் கூற்று (உ) : நாககுமார காவியம் சமணநூல்

காரணம் (கா) : பஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறுவது

  • (உ), (கா) இரண்டும் சரி
  • (உ) சரி (கா) தவறு
  • (உ), (கா) இரண்டும் தவறு
  • (உ) தவறு (கா) சரி

9. பொருத்துக:

வாக்குண்டாம்  1) மூதுரை

நறுந்தொகை  2) வெற்றிவேற்கை

நெடுந்தொகை  3) அகநானூறு

கூத்தராற்றுப்படை 4) மலைபடுகடாம்

  • 1, 3, 4, 2
  • 1, 2, 3, 4
  • 2, 1, 3, 4
  • 3, 2, 1, 4

10. அமுத சுரபியைக் கோமுகியில் இட்டவன்

  • ஆதிரை
  • உதய குமாரன்
  • ஆபுத்திரன்
  • சாதுவன்

Previous Post Next Post