1. உப்பு சட்டங்களை
எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?
- சௌரி சௌரா
- சாம்பரன்
- கோபால்பூர்
- தண்டி
2. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
- மும்பாய்
- தில்லி
- லண்டன்
- லீட்ஸ்
3. 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது ஏனெனில்
- மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை
- இந்திய சுதேச அரசர்கள் அதற்கு உதவவில்லை
- இரஷ்யர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவினர்
- முகம்மதியர்கள் ஒதுங்கி இருந்தனர்
4. “டில்லி சலோ” என்ற கோஷத்தை முழங்கியவர்
- சுபாஷ் சந்திரபோஸ்
- வ.உ.சிதம்பரனார்
- அரவிந்த கோஷ்
- வாஞ்சி அய்யர்
5. இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத
ரத்னா விருது பெற்றவர்
- டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- டாக்டர் ஜாகிர் உசேன்
- வி.வி.கிரி
- ஆர். வெங்கட்ராமன்
6. அமைச்சரவை தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்
- சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் திரு.ஏ.வி.அலெக்சாந்தர் லார்டுவேவல்,
- திரு.ஏ.வி.எலெக்சாந்தர் மற்றும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் லார்டு வேவல்,
- லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் திரு.ஏ.வி.அலெக்சாந்தர் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ்,
- லார்டு வேவல் மற்றும் லார்டு பெத்திக் லாரன்ஸ்
- 1 மற்றும் 4 சரியானவை
- 3 மற்றும் 4 சரியானவை
- 1 மட்டும் சரியானது
- எதுவும் சரியல்ல
7. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர்
யார்?
- ரவீந்திரநாத் தாகூர்
- ராஜாராம் மோகன்ராய்
- ஜெயபிரகாஷ் நாராயண்
- அம்பாலால் சாராபாய்
68. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துயுள்ளது?
- பகத்சிங் - கதர்கட்சி
- ஏ.ஓ.ஹியூம் - மத்திய பாராளுமன்ற மண்டபத்தில் வெடிகுண்டு
- லாலா ஹர்தயாள் - இந்திய தேசிய காங்கிரஸ்
- வாஞ்சி ஐய்யர் - ஆஷ்துரை
9. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு.
1. லக்னோ ஒப்பந்தம்
2. இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்
3. ரௌலட் சட்டம்
4. வங்கப் பிரிவினை
- 1,3,2 மற்றும் 4
- 4,1,3 மற்றும் 2
- 1,2,3 மற்றும் 4
- 4,3,2 மற்றும் 1
10. பின்வருவனவற்றை ஆய்க. (குறியீடுகள் மூலம் விடையைத் தேர்தெடுக்க)
துணிபுரை(A): இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சனையை
வளர்ப்பதும் குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிப்பதும் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.
காரணம்(R): தாங்கள் இந்தியாவில் இருப்பதற்கு இதனை ஒரு
காரணமாகவும் தங்களை நடுவுநிலைமை தவறாத சமரசம் செய்து வைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ளவும்
பிரிட்டிஷார் விரும்பினர்.
- (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- (A) சரி, ஆனால் (R) தவறு
- (A) தவறு, ஆனால் (R) சரி