TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 05


1. உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
  • A. தன்வினை வாக்கியம்✔
  • B. பிறவினை வாக்கியம்
  • C. கட்டளை வாக்கியம்
  • D. செயப்பாட்டு வினை வாக்கியம்
2. மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
  • A. துன்பம்
  • B. வறுமை
  • C. அச்சம்
  • D. மலர்ச்சி✔
3. கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
  • A. செய்யுளிசை அளபெடை
  • B. சொல்லிசை அளபெடை
  • C. இன்னிசை அளபெடை✔
  • D. ஒற்றளபெடை
4. தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
  • A. பிறவினை வாக்கியம்
  • B. செயப்பாட்டு வினை வாக்கியம்✔
  • C. தன்வினை வாக்கியம்
  • D. செய்வினை வாக்கியம்
5. வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  • A. ஆகு பெயர்
  • B. அளபெடை✔
  • C. முற்றெச்சம்
  • D. ஈற்றுப்போலி
6. பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
  • A. வேட்டை
  • B. வேட்கை
  • C. நயவஞ்சகம்✔
  • D. வேண்டாமை
7. எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
  • எப்பொருள் - கேட்பினும்
  • கேட்பினும் - அப்பொருள்
  • யார் யார் வாய் - அப்பொருள்
  • எப்பொருள் - அப்பொருள்✔
8. கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
  • A. வினைத்தொகை
  • B. சொல்லிசை அளபெடை✔
  • C. ஆகுபெயர்
  • D. அன்மொழித்தொகை
9. சுடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
  • A. சுட்ட
  • B. சுடுதல்✔
  • C. சூடு
  • D. சுட்டான்
10. நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
  • A. நின்றார்
  • B. நின்று
  • C. நின்றவன்✔
  • D. நிற்றல்
Previous Post Next Post