TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 06

1. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை
  • A. கூப்பிடு - தயிர்
  • B. நத்தை - சேறு
  • C. துன்பம் - சோறு
  • D. கடல் - பாம்புப்புற்று✔
2. பிரித்து எழுதுக : பாடாண் திணை
  • A. பா + டாண் + திணை
  • B. பாடா + திணை
  • C. பாடு + ஆண் + திணை✔
  • D. பாடாண் + திணை
3. பொருந்தாத் தொடரைத் தேர்க :
  • A. வாடகை - குடிக்கூலி
  • B. பந்தயம் - பணயம்
  • C. தெம்பு - ஊக்கம்✔
  • D. வாடிக்கை - ஒழுங்கு
4. அழி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
  • A. அழிதல்
  • B. அழிந்து✔
  • C. அழித்தல்
  • D. அழிந்த
5. மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
  • A. மகிழ்ந்து
  • B. மகிழ்தல்
  • C. மகிழ்ந்தவன்✔
  • D. மகிழ்க
6. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை
  • A. மெலிதல் - நூல்✔
  • B. கோழை - எச்சில்
  • C. நெகிழ்தல் - பூசுதல்
  • D. இளையவன் - வறுமை
7. எதிர்சொல் தருக: சான்றோர்
  • A. உயர்ந்தோர்
  • B. மேலோர்
  • C. புல்லர்✔
  • D. ஆன்றோர்
8. நூ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  • A. தேர்
  • B. புத்தகம்
  • C. அணிகலன்✔
  • D. உடை
9. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
  • A. சீட்டுக்கவி
  • B. ஆசுகவி
  • C. மதுரகவி
  • D. விகடகவி ✔
10. செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
  • A. பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
  • B. விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது✔
  • C. விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
  • D. பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
11. திறன் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  • A. ஈற்றுப்போலி✔
  • B. தொழிற்பெயர்
  • C. ஆகுபெயர்
  • D. வினையெச்சம்
12. கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.
  • A. கயிலையெனும் - கனகமகா
  • B. வடமலை - தெற்குமலை
  • C. அம்மே - அம்மே✔
  • D. நிற்குமலை - மேருவென
13. தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
  • A. இளங்கோவடிகள்
  • B. திருத்தக்கத் தேவர்
  • C. நாதகுத்தனார்
  • D. சீத்தலைச் சாத்தனார்✔
14. நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  • A. உம்மைத் தொகை
  • B. இழிவு சிறப்பும்மை
  • C. எண்ணும்மை✔
  • D. வினைத்தொகை
15. கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
  • A. ஆதரவு
  • B. தாவுதல்
  • C. ஆதரவின்மை✔
  • D. அசைதல்
Previous Post Next Post