TNPSC பொதுத்தமிழ் – பொருந்தாச் சொல்

பொருந்தாச் சொல்

தமிழில் கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டு வரையிலான நூல்கள் பெரும்பாலும் தொகுப்பு நூல்களாகவே உள்ளன. முச்சங்க நூல்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிருதிருமுறைகள், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், சைவசித்தாந்த சாத்திரங்கள் என அனைத்தும் தொகுப்பு நூல்களே. பொருந்தாச் சொல்லை இதில் மாற்றி அமைப்பார்கள்.
(1)காய்சின வழுதி        (2) முடத்திருமாறன்
(3)உக்கிரப் பெருவழுதி (4) நின்றசீர் நெடுமாறன்

  • இதில் நின்றசீர் நெடுமாறன் தவிர மற்ற மூவரும் முச்சங்கங்கள் ஆதரித்த அரசர்கள்
    (1)முல்லைப்பாட்டு – திருமுறுகாற்றுப்படை
    (2)நெடுநல்வாடை – சிறுபாணாற்றுப்படை
    (3)பட்டினப்பாலை – பதிற்றுப்பத்து
    (4)மலைபடுகடாம் – மதுரைக்காஞ்சி
  • இதில் பதிற்றுப் பத்து மட்டும் எட்டுத் தொகை மற்றவை பத்துப்பாட்டு நூல்
    (1)கூடலூர் கிழார் (2)நக்கீரர்
    (3)கபிலர் (4)மாங்குடி மருதனார்
  • இதில் கூடலூர் கிழார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக் காஞ்சியில் ஆசிரியர், மற்றவர் பத்துப்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள்.
  1. பொருள் அடிப்படை :
  • பொருள் இலக்கணத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிப்பர். ஆதன் அடிப்படையிலும் வினா அமைதல் உண்டு.
    (1)குறிஞ்சிப் பாட்டு (2)முல்லைப்பாட்டு
    (3)புறநானூறு (4)குறுந்தொகை
  • இதில் புறநானூறு புறநூல். மற்றவை அகநூல்கள்.
    (1)இன்னா நாற்பது (2)இனியவை நாற்பது
    (3)கார் நாற்பது (4)களவழி நாற்பது
  • இதில் கார் நாற்பதைத் தவிர மற்றவை புறநூல்களாகும்
  1. நூற்பெயர்:
  • நூலின் பெயர் சில தன்மைகளின் அடிப்படையில் இடப்பட்டிருக்கும். அதனாலும் வினா அமையலாம்.
    (1)சிறுபஞ்சமூலம் (2)ஆசாரக்கோவை
    (3)ஏலாதி (4)திரிகடுகம்
  • இதில் ஆசாரக்கோவை தவிர மற்றவை மருந்தால் பெயர் பெற்றவை.
    (1)சிலப்பதிகாரம் (2)மணிமேகலை
    (3)சூடாமணி (4)நீலகேசி
  1. சமய வகைப்பாடு:
  • சங்க காலத்திற்குப் பிறகு தமிழும் சமயமும் இணைந்தே வளர்ந்துள்ளன. இவற்றைப் பிரித்தல் அரிது. இதன் அடிப்படையிலும் வினா அமையும்.
    (1)சிலப்பதிகாரம் (2)சீவக சிந்தாமணி
    (3)குண்டலகேசி (4)வளையாபதி
  • இதில் குண்டலகேசி மட்டும் பௌத்தநூல். மற்றவை சமண நூல்கள்
    (1)பிரபுலிங்கலீலை (2)திருவருட்பயன்
    (3)தகராலயரகசியம் (4)திருவாய்மொழி
    இதில் திருவாய்மொழி மட்டும் வைணவ நூல்கள், மற்றும் சைவ நூல்கள்
  1. இலக்கிய வகைப்பாடு:
  • காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என்பன போன்று இலக்கியங்களை வகைப்படுத்தியுள்ளனர். இதிலும் வினா அமைவதுண்டு
    குண்டலகேசி – நீலகேசி
    மணிமேகலை – சீவக சிந்தாமணி
    வளையாபதி – சிலப்பதிகாரம்
    மணிமேகலை – வளையாபதி
  • இதில் நீலகேசி மட்டும் ஐஞ்சிறு காப்பியம். மற்றவை ஐம்பெருங்காப்பிய நூல்கள் ஆகும்.
    (1)வளையாபதி (2)குண்டலகேசி
    (3)கம்பராமாயணம் (4)சிவகாமியின் சபதம்
  • இதில் சிவகாமியின் சபதம் மட்டும் உரைநடைக்காப்பியம். மற்றவை செய்யுட்காப்பியங்கள்.
  1. ஆசிரியரின் நூல்கள்:
  • ஓர் ஆசிரியர் பல நூல்கள் எழுதியிருப்பார். அதில் வேறு நூல் வந்து கலப்பதுண்டு.
    (1)பெருமாள் திருமொழி (2)பெரியதிருவந்தாதி
    (3)திருவிருத்தம் (4)திருவாசிரியம்
  • இதில் பெருமாள் திருமொழி குலசேகராழ்வார் பாடியது. மற்றமூன்றும் நம்மாழ்வார் பாடியவை.
    (1)சஞ்சீவிபர்வத்தின் சாரல்
    (2)கழைக்கூத்தியின் காதல்
    (3)மணிமேகலை வெண்பா
    (4)மலரும் மணமும்
  • இதில் மலரும் மணமும் என்பது பி.எஸ். ராமையா எழுதியது. மற்றவை பாரதிதாசன் எழுதியவை
  1. கதை மாந்தர்கள்:
  • ஒரு நூலில் வரும் கதை மாந்தர்களின் நல்லோர் தீயோர் எனப் பிரிந்து வரலாம். ஒரு நூல் கதை மாந்தரிடையே வேறு நூல் கதை மாந்தர் வந்துகலக்கலாம் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    (1)இராமன் (2)சீதை
    (3)திரிசடை (4)இராவணன்
  • இதில் அனைத்தும் இராமாயணப் பாத்திரங்கள், எனினும் இராவணன் தவிர மற்றவர்கள் நல்லவர்கள்.
    (1)கர்ணன் (2)விகர்ணன்
    (3)கும்பகர்ணன் (4)அசுவத்தாமன்
  • இதில் கும்பகர்ணன் மட்டும் இராமாயணப் பாத்திரம், மற்றவர்கள் மகாபாரதப் பாத்திரங்கள்.
  1. கால மயக்கம்:
  • முதற்காலப் பொருளோடு பிற்காலப் பொருளைச் சேர்த்தல், பிற்காலப் பொருளோடு முற்காலப் பொருளைச் சேர்த்தல்
    (1)பிசிராந்தையார் (2)ஒளவையார்
    (3)கபிலர் (4)கோதைநாயகி
  • இதில் கோதைநாயகி பிற்காலத்தவர்
    (1)கவிமணி (2)நாமக்கல் கவிஞர்
    (3)அறிஞர் அண்ணா (4)உமாபதிசிவம்
    இதில் உமாபதிசிவம் காலத்தால் மூத்தவர்.
  1. பல்வேறு வகைகள்:
  • குடி, குணம், வாழ்விடம், செய்கை, இனவகை, தலைமை, உறவு, உவமை என்பன போல வருவனவற்றின் அடிப்படையிலும் அமையும்.
    (1)தென்னவன் (2)பாண்டியன்
    (3)கிள்ளி        (4)மாறன்
  • இதில் கிள்ளி என்பது சோழர் குடிப்பெயர். மற்றவை பாண்டியரின் பெயர்கள்
    (1)பாரி    (2)அதியமான்
    (3)சேரன்  (4)காரி
  • இதில் சேரன் முடியுடைவேந்தன். மற்றவர்கள் சிற்றரசர்கள் அல்லது சேரன் தவிர மற்றவர்கள் வள்ளல்கள்
    (1)கீரி      (2)நாய்
    (3)குரங்கு (4)ஆமை
  • இதில் ஆமை மட்டும் நீரில் வாழ்வன. மற்றவை நிலத்தில் வாழ்வன
    (1)கழுகு         (2)நெருப்புக்கோழி
    (3)வான்கோழி (4)சிவி
  • இதில் சிவி மட்டும் பறவையாக இருந்தும் பறக்காது. மற்றவை பறக்கும் பறவைகள்
    (1)பாம்பு (2)எலி
    (3)பல்லி (4)எறும்பு
  • இதில் எலி தவிர மற்றவை ஊர்வன ஆகும்.
    (1)சுறா     (2)கெலுத்தி
    (3)தவளை (4)வரால்
  • இதில் தவளை மட்டும் நிலத்திலும் நீரிலும் வாழும். மற்றவை நீரில் மட்டும் வாழ்வன.
    (1)திமிங்கிலம் (2)வெளவால்
    (3)மாடு         (4)உலுவை
  • இதில் உலுவை மட்டும் முட்டையிடும். மற்றவை பாலூட்டிகள்.
    (1)கண்ணகி        (2)கூனி
    (3)மணிமேகலை (4)சீதை
  • இதில் கூனியை தவிர மற்றவர்கள் கதைத் தலைவியர் ஆவர்.
    (1)தாய் (2)மகள்
    (3)மருமகன் (4)மருமகள்
  • இதில் மருமகன் மட்டும் வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர்கள் ஒரு குடும்ப உறுப்பினர் ஆவர்.
    (1)மயில் (2)குயில்
    (3)மைனா (4)கிளி
    இதில் மைனா தவிர மற்றவை பெண்ணுக்கு உவமையாக வரும்
  1. பிற அலகு கருத்துகள்
  • இந்நூலின் மற்ற 19 அலகுகளில் உள்ளவையும் இதில் வினாவாக வரலாம்.
    (1)குரைக்கும் (2)கணைக்கும்
    (3)பிளிறும்   (4)கரையும்
  • இதில் கரையும் காகம் பறவை இனம். மற்றவை விலங்கினம்
    (1)வாடகை – குடிக்கூலி (2)பந்தயம் – பணயம்
    (3)தெம்பு – ஊக்கம்       (4)வாடிக்கை – ஒழுங்கு
  • இதில் வாடிக்கை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ‘வழக்கம்’ ஆகும். மற்ற மூன்றும் சரியான தமிழ்ச் சொல்லாகும்.
    (எ.கா)நாலடியார், பழமொழி, நானூறு, கலிங்கத்துப்பரணி, இன்னா நாற்பது.
    மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது ஆகிய மூன்றும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களாகும். கலிங்கத்துப் பரணி மட்டும் பரணி இலக்கிய வகையைச் சார்ந்ததால் இங்கு கலிங்கத்துப் பரணியே பொருந்தாச் சொல்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

  1. சிலப்பதிகாரம், மணிமேகலை, நந்திக்கலம்பகம், சீவகசிந்தாமணி
    2. குறிஞ்சி,முல்லை,மருதம், மிருகம்
    3. நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம்
    4. அரிவை,காளை பெதும்பை, பேதை – காளை
    5. தூது, உலா,  பள்ளு, குயில்பாட்டு – குயில்பாட்டு
    6. குலசேகரர், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், குலசேகரர்
    7. அச்சம், நாணம், மடம், அறிவை
    இவ்வாறு தொடர்புடைய சொற்களைக் கொடுத்து இதில் தொடர்பில்லா ஒன்றைக் கண்டறிவது சிக்கலான ஒன்றாகும். பெரும்பாலும் நான்கும் ஒரே தொடர்புடையதாக இருக்கிற போது அதிகக் காரணங்களால் வேறுபடுவதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
    எ.கா. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,  மகாத்மா காந்தி, நேரு இதில் மகாத்மா காந்தி மட்டும்தான் பிரதமராகவும் இல்லை நேரு குடும்பத்தைச் சார்ந்தவரும் இல்லை. ஆனால் இந்திரா காந்தியைத் தேர்வு செய்தால் அவர் ஒருவர் மட்டுமே பெண்பால் என்று நினைக்கலாம். ஆனால் இரு காரணத்தால் மகாத்மா காந்தி வேறுபட்டிருப்பதால் இதுவே சரியான விடையாகும்.
Previous Post Next Post