TNPSC GROUP 2 , 2A (தமிழ் ) மாதிரி வினா விடைகள் - 01

1. எட்டுத்தொகை நுால்களில் நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நுாலினைத் தேர்ந்தெடுக.

A) குறுந்தொகை

B) அகநானுாறு

C) கலித்தொகை

D) ஐங்குறுநூறு

2. பொருந்தா இணையைச் சுட்டுக.

A) குறிஞ்சி - யாமம்

B) முல்லை - மாலை

C) மருதம் - நண்பகல்

D) நெய்தல் - ஏற்பாடு

3. 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பின்றைநிலை முனியாது கற்றல் நன்றே' இப்பாடல் இடம்பெறும் நுால்?

A) அகநானூறு

B) புறநானுாறு

C) நற்றிணை

D) பரிபாடல்

4. அகநானுாற்று செய்யுளின் அடிவரையறை

A) 4 - அடிகள்

B) 9 - 12 அடிகள்

C) 1 - 6 அடிகள்

D) 13 - 31 அடிகள்

 5. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?

A) உக்கிரப் பெருவழுதி

B) பாண்டியன் மாறன் வழுதி

C) நல்லந்துவனார்

D) நன்னன் சேய் நன்னன்

 6. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி' என்ற பாடலை இயற்றியவர்.

A) நக்கீரர்

B) நம்பி

C) இறையனார்

D) யாருமில்லை

7. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நுால்

A) திருவருட்பா

B) திருக்குறள்

C) மகாபாரதம்

D) ராமாயணம்

8. திருக்குறளில் 'எழு' என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

A) 11

B) 9

C) 8

D) 10

9. நான்மணிக்கடிகை என்னும் சொல்லில் கடிகை என்பதன் பொருள்

A) தோள் வளை

B) கை வளை

C) கால் வளை

D) கழுத்தணி

10. ‘முறைக்கு மூப்பு இளமை இல்' என்ற அடி இடம் பெறுவது கீழ்க்கண்டவைகளில் எவற்றில் ?

A) பழமொழிநானூாறு

B) ஆசாரக் கோவை

C) சிறுபஞ்சமூலம்

D) ஏலாதி 

Previous Post Next Post