தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்
காலியிடங்கள்: 335
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவினர் ரூ.300, மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023
Tags:
APPLY