திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் சனிக்கிழமை (பிப்.11) வெளியிட உள்ளது. திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் சனிக்கிழமை (பிப்.11) வெளியிட உள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயில் கருவறை கோபுரத்தில் தங்கத் தகடுகள் பொருத்தும் பணிகள் தொடங்க இருந்ததை அடுத்து தேவஸ்தானம் பிப்.21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பாலாலயம் செய்ய முடிவு செய்தது. எனவே, அந்த நாள்களில் தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தங்கத் தகடுகள் பொருத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பிப்.21 முதல் 28 வரை ரத்து செய்யப்பட்ட தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தற்போது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தா்களுகளின் வசதிக்காக பிப்.23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலான தரிசன டிக்கெட்டுகள் சனிக்கிழமை (பிப்.11) காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.
டிக்கெட்டுகளை பக்தா்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், வரும் 22-ஆம் தேதி முதல் 28 வரையிலான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்று காலை 9 மணி முதல் டிக்கெட்டுகளை பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:
GENERAL NEWS