பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புதல் - தலைமையாசிரியர் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


2023-2024 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக தகுதி படைத்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 

இணைப்பில் உள்ள பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள , தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 22.02.2023 அன்று நேரில் தனிநபர் மூலம் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இப்பொருள் சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

Previous Post Next Post