ரத்தத்தில் இருக்கிற ஹீமோகுளோபின் லெவலை அதிகரிப்பதற்கான இயற்கை குணங்கள்.
ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் லெவல் கம்மியாக இருக்கும் போது ரத்த சோகை ஏற்படும்.
ரத்தசோகை ஏற்படும் காரணங்கள் அவை:
1: இரும்பு சத்து குறைபாடு காரணமால் ரத்தசோகை ஏற்படும்.
2: புற்றுநோய், சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, மஞ்சகாமாலை, மலேரியா, டெங்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தா கூட ரத்த சோகை ஏற்படும்.
3: இந்த ரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக வரும்.
4: குழந்தைகளுக்கும் இரத்த சோகை பிரச்சனை ஏற்படும்.
5: ரத்த சோகை காண அறிகுறிகள்:
1: உடல் சோர்வடையும்.
2: தொடர்ந்து கொட்டாவி வரும்.
3: தூக்கம் கண்ணில் இருந்து கொண்டே இருக்கும்.
4: பசியின்மை.
5: எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் இருக்காது.
6: உடல் எடை குறையும்.
இதெல்லாம் ரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.
6: ரத்த சோகை முத்தினால் கண்கள் எல்லாம் வெளுத்திருக்கும். கை கால் நகங்கள் ரத்தம் இல்லாமல் வெளுத்திருக்கும்.
7: முடி கொட்டும் மற்றும் சுருக்கம் வரும்.
ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும் அவர்களுக்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். அவை
1: பேரிச்சம்பழம்
2: கீரை வகைகள்
3: பிரக்கோலி
4: நாட்டுக்கோழி
5: நாட்டுக்கோழி முட்டை
6: வேர்க்கடலை
7: பயிறு வகைகள்
8: மீன் மற்றும் உலர்ந்த திராட்சை.
இது போன்ற உணவுகள் எடுப்பது நல்லது.
ரத்த சோகை குணப்படுத்துவதற்கு இயற்கை வைத்தியம்:
இதற்கான பொருள்கள் அவை:
1: குப்பைமேனி பவுடர் (சளி, இரும்பல் ஆஸ்துமா, சைனஸ், தலைவலி , இது போன்ற பிரச்சினைகளுக்கு நல்லது ரத்தத்தை சுத்தம் செய்யும்).
2: மிளகு
செய்முறைகள்:
1: ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்கவும் பின்பு அதில் 200 மில்லி பசும்பால் சேர்க்கவும்.
2: பசும்பால் இல்லை என்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
3: அந்தப் பாலில் அரை ஸ்பூன் அளவுக்கு குப்பைமேனி பவுடர் சேர்க்கவும்.
4: மூன்று மிளகு தட்டி எடுத்துக் கொள்ளவும் அதை அந்த பாலில் சேர்க்கவும்.
5: அதை நன்றாக கொதிக்க வைக்கவும்.
6: பின்பு அதை ஆறவிட்டு காலையில் குடிக்கவும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படி செய்து குடிக்க வேண்டும்.
7: இதில் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது ஏனென்றால் அதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.
இப்படி குடித்து வந்தால் ஏழு நாளில் ரத்த சோகை பிரச்சனை நீங்குவதற்கான அறிகுறிகள் தெரியும்.
இதனை தொடர்ச்சியாக 48 நாள் குடித்து வந்தால் ரத்த சோகை பிரச்சனை நீங்கிவிடும்.
அதேபோன்று ஆஸ்துமா, சைனஸ் உள்ள பிரச்சினைகளுக்கும் இந்த வைத்தியம் செய்து வந்தால் குணமாகிவிடும்.
அல்சர் பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். மலச்சிக்கல் மூல பிரச்சினைகளுக்கு இதை பயன்படுத்தினால் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும்.
Tags:
உடல் நலம்