இந்த 3 பொருளை நைட் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் குடிங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க..

ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசிலவற்றை தினசரி மேற்கொண்டு வருகிறார்கள்.

அதில் பெரும்பாலானோர் மேற்கொள்ளும் ஒரு பழக்கம் தான் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக ஆரோக்கியமான பானங்களைக் குடிப்பது. உதாரணமாக காலையில் எழுந்ததும், நிறைய பேர் உடல் ஆரோக்கியத்திற்காக சுடுநீரில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடித்து வருகிறார்கள்.


ஆனால் இந்த பானத்தை விட, இன்னும் சிறப்பான பலனைத் தரும் ஒரு அற்புதமான பானம் ஒன்று உள்ளது. இந்த பானத்தைக் குடித்து வந்தால், எதிர்பாராத பல அற்புதமான மாற்றங்களை உடலில் காணலாம். அது வேறொன்றும் இல்லை, வெள்ளரிக்காய், புதினா, எலுமிச்சை நீர்.

இந்த நீரைக் குடித்து வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக தற்போது பலரும் அவதிப்படும் சில முக்கிய பிரச்சனைகளில் விடுபடலாம். இப்போது இந்த டிடாக்ஸ் நீரை எப்படி தயாரிப்பது மற்றும் இந்நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

நீரேற்றத்துடன் இருக்கும்

இந்த டிடாக்ஸ் நீர் உடல் வறண்டு போகாமல், நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். ஏனெனில் வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது உடலை குளிர்ச்சியாகவும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ளும். மேலும் எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் பண்புகள் நல்ல செரிமானத்திற்கு உதவும் மற்றும் புதினா உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

எடை இழப்புக்கு உதவும்

இந்த டிடாக்ஸ் நீர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறைய உதவுகிறது. அதோடு, இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்க செய்வதால், பசி கட்டுப்பட்டு, கண்ட உணவுகளின் மீதான ஆவலையும் குறைக்கிறது. எனவே எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது ஒரு சிறந்த பானம்.

செரிமான ஆரோக்கியம் மேம்படும்

ஒருவரது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலே, உடலில் பலவிதமான பிரச்சனைகளின் அபாயம் குறையும். அதுவும் காலையில் எழுந்ததும் இந்த டிடாக்ஸ் நீரைக் குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு வலுவடைந்து, குடலியக்கம் சிறப்பாக நடைபெறும். இதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும்.

நச்சுக்கள் நீங்கும்

நாம் உண்ணும் உணவுகள் மற்றும் சுவாசிக்கும் காற்றினால், நமது உடலில் நச்சுக்கள் தினமும் அதிகம் சேர வாய்ப்புள்ளது. இப்படி உடலினுள் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான், உடல் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த டிடாக்ஸ் பானம் நச்சுக்களை சிறுநீரின் வழியே வெளியேற்ற பெரிதும் உதவி புரிகிறது.

சரும அழகு மேம்படும்

இந்த டிடாக்ஸ் பானம் உடலில் நச்சுக்களை வெளியேற்றி, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதன் மூலம், சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக இந்த நீரை குடித்து வந்தால், முகப்பரு, கருமையான கறைகள் போன்றவை நீங்கி, சருமம் நன்கு பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

இந்த நீரில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்வதோடு, உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.

டிடாக்ஸ் நீரை தயாரிப்பது எப்படி?

ஒரு பெரிய ஜாரில் நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/2 வெள்ளரிக்காயை நறுக்கி போட வேண்டும். அதன் பின் 1/2 எலுமிச்சையை வெட்டிப் போட வேண்டும். பின்பு சிறிது புதினா இலைகளை நறுக்கி, அதையும் நீரில் போட வேண்டும். பின் அந்த ஜாரை மூடி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
Previous Post Next Post