தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரப்பதிவிற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாக தான் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஏடிஎம் கார்டு வசதிகளும் சார் பதிவாளர் அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி நேரடி பண பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாது. முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை பொதுமக்கள் செலுத்த வேண்டும். இதனால் பத்திரப்பதிவிற்கு வரும்போது பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வர தேவை இல்லை என்றும் பத்திரப்பதிவிற்கு அதிகாரிகள் பணம் கேட்டால் பொதுமக்கள் யாரும் வழங்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்