வாழைப்பூ சாப்பிடுவதால் நன்மைகள்

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

♦வாழைப்பூவின் முதல் நன்மையாகப் பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும். 

♦ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும்.

♦வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம். 

♦ உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. இதையும் படிக்க | தலைமுடி, சரும ஆரோக்கியத்துக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?

♦மலட்டுத்தன்மை பிரச்னை உள்ளவர்களும் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

♦ ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம். 

♦ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 

♦ மூலப் பிரச்னைகளுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து.

எப்படி சாப்பிடலாம் 

♦வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். 

♦ உப்பு போட்டு அவித்தோ, பொரியல் செய்தோ, பருப்பு போட்டு கூட்டு செய்தோ சாப்பிடலாம். 

♦ வாழைப்பூவை வேகவைத்து சாறையும் பருகலாம். 

♦ வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம்.
Previous Post Next Post