பொதுவாக நம் உடலுக்கு எலும்புகள் முக்கியம் .நம் உடலை தாங்கி பிடிக்கும் தூண்கள்தான் எலும்புகள் .இந்த எலும்பை நாம் பாதுகாக்க தவறினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி அவஸ்த்தை படுவோம் .எனவே இந்த எலும்பை பாதுகாக்கும் வழிகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.சிலர் எந்தவித பயிற்சியும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்தே இருப்பர் .இப்படி இருப்பது உங்கள் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும்.
2.சிலர் மிக வேகமாக நடப்பர் .இப்படி நடப்பது கூட உங்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
3. சிலர் எப்போது உட்கார்ந்தாலும், தங்கள் கால்கள் மீது கால் போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
4.ஆனால் நீண்ட நேரம் கால்களைக் குறுக்காக போட்டுக் கொண்டு உட்காருவதனால் உங்கள் பாதங்களில் வலி வரலாம்.
5.எனவே கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காருவதை தவிர்த்து விடவும்
6.சிலர் உடற்பயிற்சி செய்வர் .இப்படி எக்சசைஸ் செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
7.ஆனால் சிலர் அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வர் .இப்படி செய்தால், அது கால்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
8.அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாக ,பாதங்களில் வலி ஏற்படும்
9.பாத எலும்புகள் மட்டுமல்ல உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் பலமாக இருப்பதற்கு விட்டமின் டி சத்து தேவை .
10.சூரிய வெளிச்சத்தில் நம் உடல் படும்போது தான் அதிகப்படியான விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கும்.அதனால் சூரிய ஒளியில் சிறிது நேரமாவது இருங்கள்
Tags:
உடல் நலம்