பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் 26.07.2023 முற்பகல் 10.30 மணியளவில் இயக்குநர் அறையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சங்கத்தின் சார்பாக ஒருவர் மட்டுமே கலந்துகொள்ளவும் , தங்களது சங்கத்தின் கருத்துக்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்களது கருத்துக்கள் சார்பான விவரங்களை கூட்டம் நடைபெறும் நாளன்று அதன் நகலொன்றினை நேரில் சமர்ப்பிக்கவும் , dse@tnschools.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் வழியாக Soft Copy ஆக அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது
Tags:
கல்விச் செய்திகள்