நுரையீரல் தொற்று சளி இருமல் ஆஸ்துமா சரியாக இதை மட்டும் குடித்து வந்தால் போதும்!!

நுரையீரல் தொற்று, சளி, இறைப்பு, ஆஸ்துமா பாதிப்புகளை தீர்க்க உதவும் சிறந்த இயற்கை மருத்துவத்தை பற்றி பார்க்கலாம்.

கிருமித் தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, காலநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரல் சுருக்கம், நுரையீரல் தொற்று, இரைப்பு, நெஞ்சுச்சளி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்ப பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை பல்வேறு மூலிகைகளுக்கு உண்டு. இம்மூலிகளை முறைப்படி பயன்படுத்தும் பொழுது நுரையீரல் நோய்களை குறைத்து நுரையீரல் மண்டலத்தை பலப்படுத்த முடியும். அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆடாதொடை இலை மூன்று
துளசி இலைகள் 10
மிளகு 5
முசுமுசுக்கை இலை 6 அல்லது 7

பொருட்களின் பயன்கள்:
ஆடாதொடை இலை முசுமுசுக்கை இலையில் உள்ள இயற்கையான வேதிப்பொருட்கள் ஆன்டிஆக்சிடென்ட் பண்புகள் நுரையீரலில் உள்ள பாதிப்புகளை குறைத்து நுரையீரல் மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது. சுவாசப்பாதை தொற்றை நீக்கவும் சளி கோழையை வெளியேற்றவும் உதவுகிறது. மிளகு நுரையீரல் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. துளசி இலைகள் சளி கோழையை நீக்கி சுவாசப்பாதை நோய்களை குறைக்க பயன்படுகிறது.

செய்முறை:
இந்த மூன்று இலைகளையும் ஒன்று இரண்டாக நறுக்கி அதனுடன் மிளகையும் தட்டி சேர்த்து இரண்டு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டி மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும்.

தேவைப்பட்டால் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கசாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு இந்த மூலிகை கசாயத்தை அருந்தி வந்தால் நுரையீரல் தொற்று நெஞ்சுச்சளி தொண்டை தொற்று இருமல் இரைப்பு போன்றவை நீங்கி நுரையீரல் வலிமை பெறும். ஆஸ்துமா பாதிப்புகளை குறைக்க செய்யும்.

அடுத்ததாக இரவு உணவிற்கு பிறகு திரிகடுகு சூரணம் எடுத்துக்கொள்ள வேண்டும். சுக்கு மிளகு திப்பிலி இந்த மூன்று மூலிகைப் பொருட்களும் சேர்ந்த கலவையே திரிகடுக சூரணம் இது நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் கால் தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து மிதமான சூட்டில் ஓரிரு மாதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த திரிகடுகு சூரணத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது சுவாசப் பாதை தொற்று நீங்கும் நுரையீரல் பலமடையும் சளி குலையை வெளியேற்றும். இருமல் குணமாகும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்க செய்யும். இந்த இரண்டு பானத்தையும் எடுத்துக் கொண்டு வந்தால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் சளி இருமல் இரைப்பு ஆஸ்துமா அலர்ஜி தொண்டைத் தொற்று போன்றவை குறைந்து உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இவற்றை கடைபிடிக்கும் பொழுது எண்ணெயில் பொரித்த வருத்த உணவுகள் நொறுக்கு தீனிகள் புகைப்படக்கம் மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Previous Post Next Post