ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (steps) நடந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும், நோய்களைத் தவிர்க்க முடியும் என்று பரவலாகக் கூறப்படுகிறது.
இது உண்மையா? சரிதானா? நாள்தோறும் மாறி வரும் இந்த நவீன காலத்தில் மக்களின் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் வெகுவாக மாறிவிட்டன. இதனால் உடல்நலப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.
சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் உடல் பருமனால் நீரிழிவு நோய், இதயக்கோளாறுகள் என பல பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன. இதற்காக உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன் குறிப்பிட்ட வயதிற்கு மேல் அனைவரும் தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பலரும் பரிந்துரைக்கின்றனர். உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிதான ஒன்று. அனைத்து வயதினரும் மேற்கொள்ளக்கூடியது.
அந்த வகையில் சிலர் நாள் ஒன்றுக்கு 4,000 முதல் 5,000 அடிகள் நடக்க வேண்டும் என்றும் சிலர் 10,000 அடிகள் வரை நடந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர். உண்மை என்ன? | டாப் 10 இந்திய உணவுகள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட்டில் பிரியாணி இருக்கிறதா?
நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் என்பது முடிந்தவர்கள் செய்யலாம். ஆனால் ஒரு நாளைக்கு 4,000 அடிகள் நடப்பதே போதுமானது, அது உடல்நலம் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படும் மரண அபாயத்தைக் குறைக்கும் என்று ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜி நடத்திய புதிய ஆய்வு கூறுகிறது. '10,000 அடிகள் நடப்பதால் சிறப்பு பலன்கள் என்று எதுவுமில்லை. மாறாக உடலில் கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும், உடல் மேலும் ஆரோக்கியமாக இருக்கும், அவ்வளவே.
ஆனால், 4,000 அடிகள் நடப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானது. வேண்டுமெனில் உங்களால முடிந்த அளவு ஒவ்வொரு 1,000 அடிகளாக அதிகரிக்கலாம், அப்போது உடல் ஆரோக்கியம் மேலும் 15% மேம்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
♦4,000 அடிகள் என்பது தோராயமாக 3 - 3.5 கி.மீ. தூரம்; 130-200 கலோரிகள் எரிக்கப்படுகிறது.
♦4,000 அடிகள் என்பது தோராயமாக 8 -8.5 கி.மீ. தூரம்; 300- 500 கலோரிகள் எரிக்கப்படுகிறது. | நீங்கள் ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவரா? டிபிஎம் பற்றி தெரியுமா?
- எச்சரிக்கும் நிபுணர்கள்! அதிகாலை நடைப்பயிற்சி மேலும் நடைப்பயிற்சியை அதிகாலை மேற்கொள்வது கூடுதல் பலன்களை அளிக்கிறது.
► உடலில் தேவையற்ற கொழுப்புகளை வேகமாக எரிக்கிறது.
► மன அழுத்தத்தைக் குறைக்கிறது,
► ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
► உங்கள் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது.
► சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது. | ஃபேஷியலே வேண்டாம்! தூங்கும் முன் முகத்தில் இந்த எண்ணெய் தடவினால்...!