+1,+2 வகுப்புகளுக்கு (CBSE) இரண்டு முறை தேர்வு குறித்த சில புரிதல்கள்...
* ஆகஸ்ட் 23, ஒன்றிய கல்வி அமைச்சகம் National Curriculam Framework 2023ஐ வெளியிட்டுள்ளது.
* அதே நேரத்தில் +1,+2 வகுப்பு மாணவர்கள் ஆண்டிற்கு இரண்டுமுறை பொதுத்தேர்வை எடுத்துக்கொள்ளத் திட்டம் உள்ளது.
* தற்சமயம் இது CBSE பள்ளிகளுக்கும் விரைவில் மாநிலங்களும் பின்பற்றப் பரிந்துரைத்துள்ளது. [நிர்ப்பந்தமாக மாறலாம்]
* இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்ணோ அதனை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
*விரைவில் பாடங்களை மாணவர்கள் படித்தால் இரண்டு முறை தேர்வு எழுதிக்கொள்ளலாம்.
* ஒரு அந்நிய மொழி, ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என NCF சொல்கின்றது [+1,+2விற்கு தமிழகத்தில் ஏற்கனவே மொழிப்பாடம் உள்ளது, CBSEல் அது இல்லை]
ஏன் இது குழந்தைகள் மீதான வன்முறை?
1. ஏற்கனவே பாடங்களை ஜனவரிக்குள் முடித்துவிட்டு சதா தேர்வு வைத்துச் சாகடிக்கும் நிலை, இனி அது அக்டோபரிலேயே துவங்கிவிடும்.
2. தேர்வு தாண்டி ஒன்பதாம் வகுப்பிலிருந்து சிந்திக்கத் தேவையில்லை. அனைத்தும் கட்.
3. முதல் பருவத்திலேயே பாடம் முடிக்கின்றார்கள் எனில் அடுத்த பருவம் முழுக்க ஒன்லி டெஸ்ட்.
4. இது யாருக்கு சாதகமாக அமையும். எல்லா வசதிகளும் கொண்ட பள்ளிகள் சீக்கிரமே முடித்து இரண்டு முறை தேர்வு எழுத வைக்கும்.
5. தமிழகத்தில் Improvement ஒழித்த காரணம் அது Level Playingகிற்காக. சிலருக்கு அதிக வாய்ப்பு தருவது ஒரே முறை தேர்வு எழுதுபவர்களுக்கான அநீதி என அது ஒழிக்கப்பட்டது. பொறியியல் நுழைவுத்தேர்வுகளும் இதே காரணத்தால் ஒழிக்கப்பட்டது.
6. இது செமஸ்டர் முறை அல்ல. ஆண்டு தேர்வுகளை டிசம்பர் மற்றும் மே மாதத்தில் அதே தேர்வினை எடுத்துக்கொள்ளும் முறை.
7. இதனை தமிழகம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. கூடவே இங்கே இருக்கு CBSE மாணவர்களைக் காக்கும்பொருட்டு இதனைத் தடுக்க என்ன வகையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பார்க்க வேண்டும்.
8. பாடங்களைப் படித்து முடித்த உடனே தேர்வு எழுத [exams on demand] நகரப் பரிந்துரைத்துள்ளது. இது +1,+2 குழந்தைகளுக்கு இமாலய அழுத்தத்தையே தரப்போகின்றது.
9. ஏற்கனவே +2 மதிப்பெண்ணை ஒரு பொருட்டாகக் கருதாத JEEE, NEET Aspirantsகளிக்குக் கூடுதலாக 6 மாதங்கள் கொடுத்து அவர்களை இன்னும் பல படிகள் முன்னாடி நிறுத்தவே இந்த ஏற்பாடு.
இந்த நகர்வுகள் Level Playingக்கு எதிரானது, குழந்தைகள் உளவியலுக்கு முற்றிலும் எதிரானது. எக்காலத்திலும் எக்காரணம் கொண்டு தமிழ்நாடு இதனை ஏற்கக்கூடாது. கூடவே நம் பிள்ளைகளுக்கு அரணாக நிற்கவேண்டும்.
- விழியன்
Tags:
பொதுச் செய்திகள்