குரு பார்வை கோடி நன்மையைத் தரும். மேஷ ராசியில் வக்ரமடையும் குருவின் பார்வை சில ராசிகளின் மீது விழுகிறது.
குரு பார்வையால் சில ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழைதான். செப்டம்பர் மாதம் முதல் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பார்வை தரும் யோகம்: வக்ர பெயர்ச்சி என்றால் சிலருக்கு குழப்பமாக இருக்கும். சில கிரகங்கள் பின்னோக்கி மெதுவாக நகர்வதே வக்ர பெயர்ச்சி. குரு பகவான் செப்டம்பர் முதல் டிசம்பர் இறுதி வரை அதாவது 4 மாதங்கள் வரை மேஷ ராசியில் பின்னோக்கி வக்ரமடைகிறார். இதுநாள்வரை முடியாமல் இருந்த சில நல்ல காரியங்களை வேகமாக முடித்து வைக்கும். குருபகவானுக்கு 5,7,9ஆம் பார்வை உள்ளது.
குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாக பயணம் செய்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பார்வையால் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. குருபகவானின் பார்வை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் அடையப்போகும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சிம்மம்: குருபகவானின் 5ஆம் பார்வை சிம்ம ராசியின் மீது விழுகிறது. குரு பார்வையால் சிம்ம ராசிக்காரர்களின் வீட்டில் அதிர்ஷ்ட மழைதான். தொட்டதெல்லாம் பொன்னாகும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து பெருகும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தடைபட்டு வந்த தள்ளிப் போன திருமணம் நடைபெறும்.
திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு மாறுவீர்கள். கை நிறைய சம்பளத்தில் புது வேலை கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். குரு பகவானை வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்குங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
துலாம்: குரு பகவானின் 7ஆம் பார்வை துலாம் ராசியின் மீது விழுகிறது. பண வரவு அதிகரிக்கும். பணப்பிரச்சினையால் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தை திருப்பித் தருவார்கள்.
120 நாட்கள் குரு வக்ரத்தில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். உறவினர்கள், சகோதரர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பல காலமாக முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை இனி முடித்துக் காட்டுவீர்கள். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள்.
தனுசு: குரு பகவானின் ஒன்பதாம் பார்வை தனுசு ராசியின் மீது விழுகிறது. கடந்த ஏழரை ஆண்டுகாலமாகவே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த உங்களுக்கு இப்போதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது. கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். சில பிரச்சினைகளால் விலகியிருந்த கணவன்-மனைவிக்குள் இனி அந்நியோன்யம் பிறக்கும் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள்.
பணம் பலவழிகளில் இருந்தும் வரும். செப்டம்பர் முதல் குருபகவான் வக்ரத்தில் செல்வதால்,எதிர்பாராத சில காரியங்கள் எளிதில் முடிவடையும். அதிக வேலை இருக்கிறதே என்று பதற்றமும் அடையவேண்டாம் ரிலாக்ஸ் ஆக செய்து முடியுங்கள். நன்றாக தூங்கி பல வருஷம் ஆகிவிட்டது என்று கவலைப்பட்ட நீங்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட மனகுழப்பங்கள் நீங்கும்.
Tags:
பொதுச் செய்திகள்