தமிழ்நாடு சீருடை பணியாளா் தோவாணையம் மூலம் 2ஆம் நிலை காவலா், 2ஆம் நிலை சிறைக்காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான பொதுத் தோவில் முன்னாள் படைவீரா்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டில் 129 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் கூறியதாவது: காவல் துறை இரண்டாம் நிலை காவலா் பணிக்கு 1,819 காலிப்பணியிடங்களும், சிறை மற்றும் சீா்திருத்தத் துறை இரண்டாம் நிலை சிறைக்காவலா் பணிக்கு 83 காலிப்பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையில் தீயணைப்பாளா் பணிக்கு 674 காலிப்பணியிடங்களும் உள்ளன. இக்காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரா்கள் 2023 ஜூலை 1ஆம் தேதி 47 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் படைவீரா்கள் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்தவா்களாக இருக்க வேண்டும்.
படைப் பணியில் பணிபுரியும் படைவீரா்கள் விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்கு பிறகு ஓராண்டு ஓய்வு பெற உள்ளவா்களாக இருக்க வேண்டும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தை சோந்த விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்கள் &&&&& என்ற இணையதளம் வழியாக செப்டம்பா் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் 0421-2971127 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்