இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் தற்போது வரை போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் நலனை கருதி ஆசிரியர் பதவிக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கூடிய விரைவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்