உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து விடுவது உண்டு. இதை குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டுவந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
வெள்ளைப் பூண்டை நைத்து அதன் சாறு உடலில் ஊறும்வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலை படை உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவிய பின் இந்த விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும்.
கீழாநெல்லி இலையுடன் கரிசாலை இலையை சேர்த்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே காமாலை நோய் நீங்கும்.
கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
ஆடாதோடா இலைக்கஷாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.
அசோக மரத்தின் உட்பட்டையையும், அத்தி மரத்தின் உட்பட்டையையும் கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி அரை குவளை வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும்.
சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி வெல்லம், தேன் கலந்து அம்மியில் அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்கு நீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர்க்காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றுக்கு ஓமம் அருமருந்தாகும்.
திடீரென காயம் ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சர்க்கரையில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவ ரத்தப் போக்கு நிற்கும்.
காயமும் சீக்கிரம் ஆறும்.
வாய்வுக் கோளாறு காரணமாக இடுப்பு வலி இருந்தால், சுடுசோறு ஒரு கை அளவு எடுத்து மெல்லிய வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும்.
மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.
கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.
வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.
மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.
பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.
காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.
கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.
பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.
பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்
Tags:
உடல் நலம்