நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர்.
சனிபகவான் பெயரை கேட்டாலே பலரும் அச்சப்படுவார்கள்.
கர்ம வினைகளை திருப்பிக் கொடுப்பது மட்டுமே இவரது வேலையாகும். நன்மை செய்தால் நன்மை கிடைக்கும், தீமை செய்தால் தீமை உண்டாகும். அதனால் அவரைக் கண்ட அச்சப்பட தேவையில்லை.
சனிபகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறேன். அப்படி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற்றம் செய்யும் பொழுது அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும்.
சனிபகவான் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வக்ர நிலையில் விழித்து யோக நிலைக்கு பயணம் செய்து வருகிறார். இது பலராசிகளுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இருப்பினும் நான்கு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகப் போகின்றது அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
சனிபகவானால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட காலமாக இது அமையப் போகின்றது. லாப ஸ்தானத்தில் விழிப்பு நிலை அடைந்திருக்கின்ற காரணத்தினால் உங்களது நீண்ட நாள் ஆசை நிறைவேற அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
ரிஷப ராசி
சனிபகவானால் பல நன்மைகளை பெற போகின்றீர்கள். நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். தடைபட்டு கிடந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சரியான தருணத்தை பயன்படுத்திக் கொண்டால் வெற்றி உண்டாகும்.
துலாம் ராசி
சனிபகவானின் விழிப்பு நிலையானது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொட்டித் தரப் போகிறது. உங்களுக்கு இனிமேல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக சொட்டு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திடீரென எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும்.
மிதுன ராசி
சனிபகவானால் உங்களுக்கு அற்புத யோகம் உண்டாக போகின்றது. நல்ல பலன்களை உங்களுக்கு வழங்கப் போகிறார். இந்த காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் பொங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நெடுந்தூர பயணம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்