வெளிநாடுகளில் பணியில் இருக்கும்போதே உயிரிழந்த தமிழர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவி தொகை திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, வெளிநாட்டில் பணிபுரியும் போது இறந்தால், அவர்களது மகன் மற்றும் மகளுக்குத் திருமண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று முன்னதாகவே முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி அந்த திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழகமே அவர்களுக்குத் தாய்நாடு. அவர்களை நேசிப்பது மட்டுமல்லாமல் அரவணைத்துப் பாதுகாப்பதும் தாய் தமிழ்நாட்டின் கடமை. பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களுக்கு உதவவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, வெளிநாட்டில் பணிபுரியும் போது இறந்தால், அவர்களது மகன் மற்றும் மகளுக்குத் திருமண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் சார்பில் வருவாய்த்துறையின் சார்பில் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று, அங்கு இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அதே சமயம் இறந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் குடும்பங்களில் உள்ள மகன் மற்றும் மகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், திருமணத்தால் ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவுகளால் குடும்பத்தில் கடனில் சிக்குவதைத் தடுக்க, மகன் மற்றும் மகளுக்குத் திருமண உதவித்தொகையாக ரூபாய் 20 ஆயிரம் வழங்கவும், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கல்வியில் அவர்களது ஆர்வத்தினை அதிகரிக்க, கல்வி உதவித் தொகை மொத்தமாக 12 ஆயிரம் வழங்கத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி: மேற்கண்ட திருமண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையைப் பெறத் தமிழ்நாடு நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். திருமண உதவித்தொகை பெற, திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
திருமண உதவித்தொகை ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக அரசின் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது அதற்கு இணையான படிப்புகளை வெளிநாட்டில் படித்து 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சேர்க்கை, மருத்துவக் கல்லூரிப் படிப்பு, பொறியியல் படிப்பு, விவசாயம் ஆகிய மாணவர்கள் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள்.
பொறியியல் (வேளாண், பொறியியல்) மற்றும் டிப்ளமோ படிப்புகள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்வி படிப்புகள், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (சேர்க்கை) மாணவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படாது. மேற்கண்ட மானியங்கள் வழங்குவது தொடர்பான விரிவான நடைமுறை அயலக நல வாரியத்தால் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்