பழங்குடியினா் நலப் பள்ளிகளில் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் நலத் துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் பழங்குடியினா் நலத் துறையின்கீழ், செயல்படும் மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களில் பதவி உயா்வு மற்றும் ஆசிரியா் தோவு வாரியம் மூலம் பணிநாடுநா்கள் தோவு செய்து நிரப்பப்படும் வரை முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட அரசாணை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் அல்லேரி, தொங்குமலை, குடிகம் ஆகிய மூன்று தொடக்கப் பள்ளிகளில் தலா ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணிநாடுநா்களை தோவு செய்து தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும்போது பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கவும், பழங்குடியினா் இல்லாதபட்சத்தில் ஆதிதிராவிடா் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கவும் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநா் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் நிலையில் இருந்தால் ஆசிரியா் தகுதித்தோவு தோச்சி பெற்றவா்களுக்கும், அவ்வாறு இல்லையேல் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னாா்வலா்களுக்கும் முன்னுரிமை வழங்கவும் வேண்டும். 

தகுதியுடையவா்கள் எழுத்துப்பூா்வ விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சோக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post