எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி அடைய இதை செய்தால் போதும் ..!

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்முடைய கிரக நிலைகளின் படி ஜாதகம் அதற்கான நேரம் நம்முடைய தசா புத்தி, கர்மபலன் இப்படி அனைத்தும் கலந்த கலவை தான் நம்மை ஒவ்வொரு கட்டத்திற்காக நகர்த்திக் கொண்டு செல்கிறது.

அவற்றில் ஏதேனும் ஒன்று கொஞ்சம் சரியில்லாத போனாலும் நாம் எடுக்கும் காரியம் எல்லாமே தடங்கலாக தான் முடியும். மேலும் அது மட்டும் இன்றி நம்மால் எந்த ஒரு காரியத்தையும் முழு சிரத்தையோடு செய்யவே முடியாது. இந்த ஒரு பரிகாரம் அந்தப் பிரச்சனைகளை அறவே தீர்க்கும் என நம்பப்படுகிறது.

வாழ்க்கையில் வெற்றி அடைய செய்ய வேண்டியது இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரே ஒரு எலுமிச்சை பழம் மட்டும் தான் தேவை. இதையடுத்து அந்த எலுமிச்சை பழம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலே கரும்புள்ளி இல்லாமலும் வாடி வதங்கிய பழமாகவோ இருக்கக் கூடாது. இதை மட்டும் கவனமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை பழத்தின் மீது (9 27) ஒன்பது என்று எண்ணெய் எழுதி கொஞ்சம் இடைவெளி விட்ட பிறகு 27 என்ற எண்ணெய் எழுத வேண்டும்.


இதை எழுதிய பிறகு நம்முடைய பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்யும் போது இந்த எலுமிச்சை பழத்திற்கும் தீபராதனை காட்ட வேண்டும். ஒன்பது என்பது கிரகங்களையும் 27 என்பது நட்சத்திரங்களையும் குறிக்கும். அதே போன்று எலுமிச்சை பழத்தை மட்டும் தான் ராஜ கனி, தெய்வக் கனி என்ற சிறப்பு பெயர்களால் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பழத்தில் இந்த எண்ணையும் எழுதி வைக்கும் போது நம்முடைய கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் விலகும்.

இந்த எலுமிச்சை பழம் கொஞ்சம் வாட ஆரம்பிக்கும் போதே அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு வேறு ஒரு எலுமிச்சை பழத்தை மாற்றி இதே போல எழுதி வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று தொடங்கலாம் அல்லது அமாவாசை தொடர்ந்து வரும் வளர்பிறை நாட்களில் செய்யலாம் வெள்ளி செவ்வாய் எல்லாம் இதற்கு மிக உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது இவற்றில் உங்களுக்கு எந்த நாள் வசதி படுகிறதோ அதில் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள்.எனவே இதன் பிறகு உங்கள் புத்தி தெளிவடைந்து நீங்கள் எடுக்கும் எந்தவித ஒரு காரியமும் சிரத்தையுடன் செய்ய முடியும் என்றும், உங்களுக்கு இருக்கும் தடங்கல்கள் நேரம் சரியில்லாதால் ஏற்படும் பிரச்சனைகள் என் கண் திருஷ்டி கெட்ட சக்திகளால் ஏற்படும் தீமைகள் கூட விலகும் என சொல்லப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post