தொப்பை கரைந்து உடல் எடை குறைய... இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்

எடை இழப்பு குறிப்புகள்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம்.

ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். உடல் எடையை குறைக்க பல வித இயற்கையான வழிகளும் உள்ளன. அவற்றின் மூலம் உடல் எடையும் குறைவதோடு, அதனால் நமக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான இயற்கை உபாயம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை குறைப்பதற்கான முதல் படி உணவில் கவனம் செலுத்துவதாகும். உணவு சீரானதாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும், எடையும் குறையும். பல சமையலறை பொருட்கள் எடை இழப்பில் உதவுகின்றன. அவற்றில் ஒன்று இலவங்கப்பட்டை.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை சரியான முறையில் உட்கொண்டால், வயிற்றில் உள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். கொழுப்பை எரிப்பதில் இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதை பல வழிகளில் உட்கொள்ளலாம். உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க, உணவில் இலவங்கப்பட்டை எவ்வாறு சேர்ப்பது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஒரு மசாலா பொருள் ஆகும். இது தேநீர் முதல் பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. இலவங்கப்பட்டை லேசான இனிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. மேலும் இதன் வாசனையும் மிக இதமாக இருக்கும். உடல் எடையை குறைக்க இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை தேநீர்

எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தேநீர் தயாரித்து குடிக்கலாம். இதற்கு ஒரு கப் தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை தேவைப்படும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் இலவங்கப்பட்டை தேநீர் தயார். இந்த எடையைக் குறைக்கும் டீயை நிமிடங்களில் செய்து குடிக்கலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும்.

இலவங்கப்பட்டை காபி

இலவங்கப்பட்டையை காபியில் கலந்தும் குடிக்கலாம். இது காபியின் சுவையை அதிகரிக்கிறது. காபியோடு இலவங்கப்பட்டை கலந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இலவங்கப்பட்டை நீர்

எடையை குறைக்க அடுத்த வழி, இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பது. இலவங்கப்பட்டை தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு இலவங்கப்பட்டை அல்லது அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி போட்டு இரவு உணவுக்கு அரை மணி நேரம் கழித்து குடிக்கவும். இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடித்த பிறகு, நீங்கள் வேறு எதையும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இலவங்கப்பட்டையை காய்கறிகள், ஸ்மூத்தி, சூடான சாக்லேட் அல்லது ஷேக்குகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம். இது உடலுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இலவங்கப்பட்டையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
Previous Post Next Post