வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்பூரம் வீட்டின் தோஷங்களை நீக்கும் சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அனைத்து அறைகளின் மூலையிலும் கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.
இதனால் வீட்டில் வசிப்பவர்களை வாஸ்து தோஷங்கள் பாதிக்காது.வீட்டில் தினமும் காலையிலும், மாலையிலும், கற்பூரத்தை பசு நெய்யில் நனைத்து வீடு எங்கும் தெளிக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.இரவில் சமையலறை வேலைகளை முடித்துவிட்டு சுத்தமான பாத்திரத்தில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை சேர்த்து ஒன்றாக எரிப்பதன் மூலம் பல நன்மைகள் நம் வீட்டுக்கு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
நீரில் சிறிது அளவு கற்பூரத்தை கரைத்து குளிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றலும், சக்தியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்களோடு செயல்படுவோம்.
வீட்டில் நேர்மறை ஆற்றலுக்காக தினமும் காலை அல்லது மாலை கற்பூரத்தை ஏற்றி அதன் புகையை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் காண்பிக்க வேண்டும்.
தினமும் மாலை வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்பூரத்தை ஏற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் மற்றும் பொருளாதார வளம் அடைவீர்கள்.
Tags:
உடல் நலம்