சமையல் கேஸ் விலை ரூபாய் 200 குறைக்கப்படும் என இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 200 சமையல் கேஸ் விலை குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த விலை குறைப்பால் மத்திய அரசுக்கு ரூபாய் 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் விலை ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சமையல் கேஸ் விலை குறைய போவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Tags:
பொதுச் செய்திகள்