வாட்ஸ்அப்பில் பெயர் இல்லாமலேயே குரூப் கிரியேட் செய்யும்படியான புதிய அப்டேட்டை Whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Whatsapp:
Whatsapp நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக வகையில் ஏகப்பட்ட அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கியபடி இருந்து வருகிறது. அந்த வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்டிக்கர்களை உருவாக்கம் செய்வது, பயனர்களுக்கு உயர்தர HD புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வது, வீடியோ கால் மூலமாகவே ஸ்கிரீன் ஷேர் செய்வது, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்வது என தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்டுகளை வழங்கியபடி இருக்கிறது.
இதனை தொடர்ந்து, இமெயில் மூலமாக whatsapp அக்கவுண்டை லாகின் செய்யும் வசதியையும் whatsapp அறிமுகம் செய்திருக்கிறது, இந்நிலையில், புதிதாக whatsapp குரூப் கிரியேட் செய்யும்போது எந்தவித பெயரும் இல்லாமலேயே உருவாக்கம் செய்யும்படியான அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், whatsapp குரூப்பில் நீங்கள் Save செய்துள்ள நண்பர்களின் பெயர் காண்பிக்கப்படாது.
அதாவது, whatsapp குரூப்பில் நண்பர்களின் மொபைல் எண் மட்டுமே தெரியும்படியான அம்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் தற்போது whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டால் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:
பொதுச் செய்திகள்