சிறைத் துறை அலுவலர் உள்பட 4 தேர்வுகளுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சிறைத்துறை பணிகளில் அடங்கிய சிறை அலுவலர்(ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர்(பெண்கள்) பதவியில் காலியாக உள்ள 8 பணியிடங்களுக்காக டிச.26ம் தேதி நடந்த தேர்வில் 4,454 பேர் பங்கேற்றனர்.
அதில் தகுதி அடிப்படையில், நேர்முக தேர்விற்கு தற்காலிகமாக 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 14ம் தேதி நடைபெறும்.
குரூப் 3ல் அடங்கிய(குரூப் 3ஏ பணிகள்) காலியாக உள்ள 33 இடத்துக்கு நடைபெற்ற தேர்வில் 44,253 பேர் கலந்து கொண்டனர். இதில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 17,167 பேரின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உளவியல் பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவியில் காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 36 பேர் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெறும்.
Tags:
பொதுச் செய்திகள்