குட் நியூஸ்... செப்.5 க்குள் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் பட்டியல்!அதிகாரிகள் தீவிரம்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்திருப்பவர்களில், தகுதியானவர்கள் பட்டியலை செப்.5ம் தேதிக்குள் தயார் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிமைத் தொகை விண்ணப்பங்களுடன் மகளிர்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்காக 1 கோடி 64 லட்ச விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக வீடு வீடாக கள ஆய்வு செய்து, விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற செப்டம்பர் 5ம் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்

இதன் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது பற்றி பொதுமக்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதில் நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.ஓ. அல்லது சப்-கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண முடியும்.
Previous Post Next Post