மாரடைப்பு வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் குறித்து இதய மருத்துவர் சொக்கலிங்கம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு வருகிறது. உடற்பயிற்சி செய்தவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என பலரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். மாரடைப்பு ஏற்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள் பற்றி இதய மருத்துவர் சொக்கலிங்கம் பிரபல தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதுபற்றி இதய மருத்துவர் சொக்கலிங்கம் கூறுகையில், எதனால் மாரடைப்பு வருகிறது என்று பார்த்தீர்கள் என்றால், இதயம் மனிதனின் இடதுபாகத்தில் இருக்கிறது. இந்த இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு லட்சம் முறை துடிக்கிறது. நாம் 100 வருடம் கடந்து வாழ்கிறோம் என்றால் இதயம் சீராக துடிப்பதே காரணம். இதயம் சீராக துடிப்பதற்கு ரத்தம் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அதற்கு கொரோனெரிவெர்செல்ஸ் என்று பெயர். கொரோனெரிவெர் செல்ஸ் தான் வேண்டிய ஆக்சிஜன், நியூட்ரிசியனை இதய தசைகளுக்கு எடுத்து செல்லும்.. இதுதான் சக்தி வாய்ந்த மசில்.
எதிர்மறை எண்ணங்கள்: இதில் முக்கியமான விஷயங்கள் பார்த்தீங்க அப்படீன்னா.. எதிர்மறை எண்ணங்கள்.. எதிர்மறை எண்ணங்கள் என்ன என்று பார்த்தால், எப்ப பார்த்தாலும், கோபமாக, டென்சனாக, ஆத்திரத்துடன், பொறாமையுடன், போட்டியுடன் எதிர்மறை எண்ணங்கள் வரும் போது, அட்ரினல் என்ற ஹார்மோன் சுரக்கிறது.. அட்ரினல் என்ற ஹார்மன் சுரக்கும் போது, உடனே அவன் வந்து கொழுப்பான உணவுகளை சாப்பிட தூண்டப்படுவான்.. கொழுப்பான உணவு சாப்பிட்ட உடன் அவன் உடல் உடனே பருமானாகிவிடும்.. இந்த லெவலில் போகும் போது, அவன் உடற்பயிற்சியை தவிர்த்து விடுவான்..
மது புழக்கம், புகைப்பழக்கம்: உடனே அவன் நினைத்து கொள்வான்.. மகிழ்ச்சி என்ற ஒன்றை அடைவதற்கு, புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் வழி என நினைப்பான். அது மகிழ்ச்சி தருவதாக மாய உணர்வில் சேர்ந்துவிடுவான்.. அப்படி சேர்ந்தால், இந்த நான்கு போய் (எதிர்மறை எண்ணங்கள், கொழுப்பு உணவுகள், மது, புகை) ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இது தொடர்ச்சியாக வரும்.
மாரடைப்புக்கு 3 காரணங்கள்: எதிர்மறை எண்ணங்களால் அட்ரினல் சுரபி சுரக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு ரத்த குழாயில் படிந்து விடுகிறது. எப்பொழுது அட்ரினல் சுரப்பால் கொழுப்பு ரத்த குழாயில் படிக்கின்றதோ அதுதான் ரத்த குழாய் அடைப்பு.
இளம் வயது மாரடைப்பு: 20, 25 வயதில் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று சொல்கிறார்களே ஏன் தெரியுமா? ரத்த குழாயில் கொழுப்பு படிவது மட்டுமின்றி, இரத்தம் உறைந்துவிடும்.. அது இரண்டு நிமிடத்தில் கூட உறைந்துவிடும்.. இல்லாவிட்டால் இந்த இரத்த குழாய் வேகமாக சுரங்குவதும் இந்த மூன்று தான் இதய அடைப்புக்கு காரணமாகிறது. அதாவது ரத்தக்குழாய் அடைப்பது, ரத்தம் உறைவது, ரத்தகுழாய் வேகமாக சுருங்குவது இந்த மூன்று தான் மாரடைப்பு என்ற கொடிய நோய்க்கு காரணம்
Tags:
உடல் நலம்