டெக்னிசியன், பிசியோதெரபிஸ்ட், நர்சிங் அதிகாரி, சுகாதார கண்காணிப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் நவம்பர் 30ம் தேதிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 487
குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 64 பதவி வகைமையின் கீழ் (category wise vacancy) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இடஒதுக்கீடு: இப்பதவிகளுக்கு, இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்.
முக்கியமான நாட்கள்:
ஆட்சேர்ப்பு அறிவிக்கை நாள் : 10-11-2023
இணையதள விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 30-11-2023, நள்ளிரவு 11:45 மணிக்குள்
விண்ணப்பக் கட்டணம்: அன்றிரவுக்குள்ளே கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.
கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும். இருப்பினும், அனைத்து வகுப்பைச் சார்ந்தபெண்கள், பட்டியல்/ பழங்குடியினர் / மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
: எழுதப் படிக்க தெரிந்தால் போதும்: கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு வேலை
கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பதாரர்கள் நெட்பாங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மூலம் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். ஏதேனும் பரிவர்த்தனைகள் / ப்ராசசிங் கட்டணம் பொருந்துமாறு இருப்பின் அவை வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை விண்ணப்ப கட்டணம் செலுத்தபட்டு விட்டால் எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்பித்தரபடமாட்டாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் பூரணமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். ஆதரவற்ற விதவைகள்/கணவரை பிரிந்து வாழும் பெண்கள் ஆகியோருக்கும் வயது உச்ச வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இந்த பதவிகளுக்கு ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். தேர்வர்கள் 60 கேள்விகளுக்கு (Objective Type Questions) பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் சுகாதார சேவைகள் இயக்குநரகம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hlldghs.cbtexam.in -ல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த இணைப்பைக் கிளிக் செய்து ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.
Tags:
வேலைவாய்ப்பு