இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 5 கேட்டரிங் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை(நவ.28) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 5 கேட்டரிங் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் நாளை செவ்வாய்க் கிழமைக்குள் (நவ.28) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கேட்டரிங் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும்.
இந்த பணியிடத்துக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
இந்த பதவிகளுக்கு நவ.28 ஆம் தேதி வரை https://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் தகவல்களுக்கு என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
வேலைவாய்ப்பு