மத்திய அரசு வேலை எல்லாரும் விரும்பி எதிர்பார்க்கும் ஒரு வேலையாக உள்ளது. நம்ம தமிழ்நாட்டில் வேலை செய்ய அதுவும் மத்திய அரசு வேலை செய்திட யாருக்குத்தான் பிடிக்காது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது 680 பணிகளை அறிவித்துள்ளது. இந்த அரசு வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
பாரத மிகு மின் நிறுவனம் வேலை விவரங்கள்
இப்போது வந்துள்ள புதிய வேலை அறிவிப்பின்படி, டிரேட் அப்ரண்டிஸ், கிராஜுவேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ் (Trade Apprentice, Graduate Apprentice, Technician Apprentice) பணிக்கு ஆட்கள் தேவையாம். இந்த வேலைகளுக்காக மொத்தம் 680 காலியிடங்களை அறிவித்துள்ளது BHEL நிறுவனம். இந்த அரசாங்க வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் 12வது, ஐடிஐ, டிப்ளமோ, பிஏ, பி.காம் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தார்கள் எளிதில் விண்ணப்பிக்க கூடிய வகையில், BHEL TRICHY APPLY ONLINE லிங்கை கொடுத்துள்ளது. ஆகவே, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசமானது 17/11/2023 முதல் 01/12/2023 வரை ஆகும். விண்ணப்பதாரர்களுக்கு 01/11/2023 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள் இருத்தல் அவசியம். இவ்வேலைக்காக நீங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம்.
அந்தந்த பணிகளுக்கு தகுந்த மாதிரி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Graduate Apprentice பணிக்கு 9000 ரூபாய் சம்பளமும், Technician Apprentice பணிக்கு 8000 ரூபாய் சம்பளமும், Trade Apprentice பணிக்கு 7700 to 8050 ரூபாய் சம்பளமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை Merit List / Certification Verification மூலம் தேர்வு செய்கிறது Bharat Heavy Electricals Limited நிறுவனம்.
விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய இணைப்புகள்:
இப்பணிகளுக்கு தனித்தனி அதிகாரப்பூர்வ இணைப்புகள் உள்ளன. கிராஜுவேட் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் Official Graduate Apprentice Notification PDF-ல் மேலும் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். டிரேட் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Trade Apprentice Notification PDF-ல் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளுங்கள். டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் Official Technician Apprentice Notification PDF-ல் பாருங்கள்.
மேலும், Online Application Form மற்றும் Diploma Apprentice & Graduate Apprentice Registration Link, Trade Apprentice Registration Link பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.
Tags:
வேலைவாய்ப்பு