வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய புயலுக்கு 'மைச்சாங்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால், மியான்மர் நாடு பரிந்துரைத்த 'மைச்சாங்' என்ற பெயர் வைக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக உருவான புயல்களுக்கு ஈரான் பரிந்துரைத்த ஹமூன், இந்தியா பரிந்துரைத்த தேஜஸ், மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
பொதுச் செய்திகள்